பேருந்து உள்ளே ஏறாமல் இருந்த இளைஞர்களை காவல் வண்டியில் ஏற்றிய போலீஸ்!

படிக்கட்டில் இருந்து மேலே ஏற சொன்ன பேருந்து நடத்துனரை வார்த்தைகளால் வசை பாடிய மது போதை வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 29, 2022, 09:19 AM IST
  • மதுபோதையில் இருந்த வாலிபர் படிக்கட்டில் நின்று பயணம் செய்ததால் அவரை நடத்துனர் இருக்கையில் அமர வலியுறுத்தியுள்ளார்.
  • இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் நடத்துனர் மற்றும் ஓட்டுநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பேருந்து உள்ளே ஏறாமல் இருந்த இளைஞர்களை காவல் வண்டியில் ஏற்றிய போலீஸ்!  title=

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கடலூர் மண்டலத்திற்கு உட்பட்ட காட்டுமன்னார்கோவில் பணிமனை பேருந்து காலை காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையத்தில்  இருந்து சேலம் செல்வதற்காக புறப்பட்டது. அந்த பேருந்தில் மதுபோதையில் ஏறிய வாலிபர் ஒருவர் சோழதரம் செல்வதற்காக டிக்கெட் எடுத்துள்ளார். 

ALSO READ | கிரிப்டோ கரன்சி பேரில் மோசடி; பல லட்சம் ரூபாயை இழந்த வாலிபர்..!

பேருந்து உள்ளே பல இருக்கைகள் காலியாக இருந்த நிலையிலும் மதுபோதையில் (alchohol) இருந்த வாலிபர் தொடர்ந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்ததால் அவரை பேருந்தின் நடத்துனர் செல்வம் இருக்கையில் அமர வலியுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதுபோதையில் இருந்த வாலிபர் பேருந்து நாச்சியார் பேட்டை அருகே சென்று கொண்டிருந்த பொழுது நடத்துனர் மற்றும் ஓட்டுநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

அப்போது பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் தங்களின் காதைப் பொத்திக் கொள்ளும் அளவிற்கு ஆபாச வார்த்தைகளால் நடத்துனரை வசைபாடினார். அது மட்டுமின்றி தான் இந்த அளவு தவுலத்தாக பேசுவதால் தன்னை புரிந்து வைத்திருக்க வேண்டும் எனவும் இந்தப் பேருந்து சோழதரம் தாண்டி போய் விடுமா என மிரட்டியதுடன் நடத்துனரை அறுத்து விடுவேன் என மிரட்டி தோரணை மேலும் அதிகரித்தது.  அதே நேரத்தில் தனது நண்பர்களுக்கு போன் செய்து சோழதரம் பேருந்து நிறுத்தத்தில் நடத்துனரை உதைக்க வேண்டும் என கூறி சரியான நேரத்தில் பேருந்து நிறுத்தத்திற்கு வரவழைத்து, மேலும் தனது மதுபோதையில் ஆட்டத்தை அதிகரித்தார். அவருக்கு ஏற்றார் போல் அவரது நண்பர்களும் பேருந்தில் ஏறி ரகளையில் ஈடுபட்டனர். 

bus

bus

இந்நிலையில் அரசுப் பேருந்தின் நடத்துனர் வாழ்நாளில் கேட்டிராத அவ்வளவு ஆபாச வார்த்தைகளில் வசை பாடும் மதுபோதை வாலிபர் பேசும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  இதுகுறித்து புகாரின் பேரில் மதுபோதையில் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்ட கோவிந்தநல்லூர் பகுதியை சேர்ந்த அருமை தாஸ் மற்றும் பூவரசன் ஆகிய 2 பேரை சோழவரம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ALSO READ | சேலத்தில் ’சதுரங்க வேட்டை’.. லட்சக்கணக்கில் மோசடி.. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News