நாடாளுமன்ற தேர்தலில் முதல்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஏப்ரல் 9, 10 ஆம் தேதிகளில் சென்னை, நீலகிரி, கோவை ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். ஏற்கெனவே, கடந்த ஜனவரி மாதத்தில் 2 முறை தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. மூன்றாவது முறையாக இரண்டு நாள் பயணமாக பிப்ரவரி 27-ம் தேதி தமிழகம் வந்தார். அப்போது, பல்லடத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
மேலும் படிக்க | கச்சத்தீவு விவகாரம்: 20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை.. செல்லூர் ராஜூ கிண்டல்
அன்று மாலை மதுரையில் நடந்த நிகழ்ச்சியிலும், மறுநாள் தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்ற மோடி, நிறைவாக திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அதனை தொடர்ந்து, மார்ச் 4-ம் தேதி சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். தொடர்ந்து, மார்ச் 18-ம் தேதி கோவையில் திறந்த வாகனத்தில் ரோடு ஷோவை மோடி நடத்தினார். இந்நிலையில், இந்த ஆண்டில் 6-வது முறையாக மோடி ஏப்ரல் 9-ம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 9 ஆம் தேதி தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னையில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ்பி.செல்வம், பால் கனகராஜ் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார் பிரதமர் மோடி. அனைவருக்கும் பொதுவான இடத்தில் திறந்த வாகனத்தில் ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் வேலூரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்தும் அன்றைய தினமே ரோட் ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார்.
இதனையடுத்து ஏப்ரல் 10 ஆம் தேதி கோவையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அதேபோல், நீலகிரி தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல் முருகனுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், அவர் பங்கேற்கும் பிரச்சார கூட்டத்துக்கான நேரம் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மேலும் படிக்க | மனைவியோடு வாழாத மோடி, மக்களை மட்டும் எப்படி குடும்பமாக நினைப்பார்? முத்தரசன் காட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ