Periyar vs Modi Clash: பல்வேறு நலத்திட்டங்களையும், சேவைகளையும் தொடங்கிவைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வந்தடைந்தார். அவரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், தமிழ்நாடு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்டோர் நேரில் வரவேற்றனர்.
தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். பிரதமர் மோடியுடன், ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் அந்த புதிய கட்டடத்தை பார்வையிட்டனர். முதலமைச்சருடன் ஸ்டாலின் உடன் பிரதமர் மோடி சிரித்துப்பேசி உரையாடினார்.
மேலும் படிக்க | வந்தே பாரத்... 'வாவ்' போட்ட வானதி! ஆர்வத்தில் கோளாறாக பேச்சு - விமானத்தை போல் வேகமா?
தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து அடையார் ஐஎன்எஸ் விமான தளத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில், சென்னை - கோவை வழித்தடத்தின் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தார். அப்போது, பள்ளி மாணவ, மாணவியருடனும் பிரதமர் மோடி உரையாடினர்.
பின்னர், அங்கிருந்து மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு சென்றார். அங்கு நடைபெற்ற ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125ஆவது ஆண்டு விழா நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில், முதலமைச்சர் பங்கேற்கவில்லை.
தொடர்ந்து, பல்லாவரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், ரூ. 5,200 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை திட்டங்களை தொடங்கிவைக்கிறார். இந்நிகழ்வு பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், கூட்டம் தொடங்க சில நிமிடங்கள் முன்னர், விழா மேடை அருகே பாஜக நிர்வாகி ஹெச். ராஜா வந்தபோது, அங்கிருந்த திமுகவினர்,'பெரியார் பெரியார்' என கோஷம் எழுப்பியதாக கூறப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக தரப்பில் இருந்து 'மோடி மோடி' என கோஷம் எழுப்பப்பட்டது. மேலும், திமுக - பாஜக தொண்டர்களில் இந்த 'கோஷ மோதல்' விழா நடைபெறும் இடத்தை பரபரப்பாகியது. அங்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் உரையாற்ற இருந்த நிலையில், தொண்டர்களின் கோஷம் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ