தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் இதுவரை 7 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் மனுதாக்கல் இன்று தொடங்குகிறது. இதை யொட்டி, தமிழக தலைமை தேர் தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பி.க்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், தேர்தல் மேலாண்மை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியதாவது:-
தமிழகத்தில் பறக்கும்படையினர், நிலை கண்காணிப்புக் குழு வினர் நடத்திய ஆய்வில் நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.60 லட்சத்து 1000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொதுச்சுவர்களில் வரையப்பட்ட 1 லட்சத்து 48 ஆயி ரத்து 206 விளம்பரங்கள், போஸ்டர்கள், பேனர்கள் அழிக்கப்பட் டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 ஆயிரத்து 111 பேர் கைது செய்யயப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.