AIADMK Latest Updates: அதிமுகவின் பொருளாளர் பொறுப்பை தொடர்ந்து எதிர்கட்சி துணை தலைவர் பதவியிலிருந்தும் பன்னீர் செல்வத்தை நீக்க முடிவு செய்துள்ளனர். பன்னீர் செல்வத்தின் சமுதாயத்தை சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன் அல்லது நத்தம் விஸ்வநாதனுக்கு அந்த பொறுப்பை வழங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை அடிப்படை உறுப்பினர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர். இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்னர் துணை பொதுச்செயலாளர்கள், 8 முன்னாள் அமைச்சர்களுக்கு உள்ளிட்டோருக்கு புதிய அமைப்பு செயளாலர்களாக நியமித்து உள்ளார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி துணை தலைவராக உள்ள பன்னீர் செல்வத்தை நீக்கி விட்டு அவரது சமுதாயத்தை சேர்ந்த நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக விரைவில் சட்டபேரவை செயலாளர் சீனிவாசனுக்கு கடிதம் எழுத உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமான ஒன்றாக ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் நீக்கியது அனைவரையும் ஆச்சர்யமும், அதிர்ச்சிக்கும் உள்ளாகியது. தன்னை யாரும் கட்சியில் இருந்து நீக்க முடியாது என்று ஓபிஎஸ் தெரிவித்து இருந்தார்.
அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து கோப்புகளை எடுத்து சென்றதாக ஓபிஎஸ் மீது வழக்கு பதிய செய்யப்பட்டு உள்ளது. மேலும் கட்சி அலுவலகத்திற்கு தற்போது சீல் வைக்கப்பட்டு உள்ளது. மறுபுறம் அதிமுக தனக்கு தான் சொந்தம் என்று சசிகலா தெரிவித்து வருகிறார். சமீபத்தில் திவாகரனின் கட்சியை அதிமுகவுடன் இணைப்பதாக கூறி இருந்தார். அதிமுகவின் பல சீனியர் அமைச்சர்கள் தற்போது எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளதால் ஓபிஎஸ்-ஸை விரைவில் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | நாடாளுமன்றத்தில் இந்த வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது: வெளியானது புதிய பட்டியல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR