அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு- OPS அட்டாக் DMK

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ததை அடுத்து, பொய் வழக்கு போட்டு காழ்புணர்ச்சி காரணமாக திமுக அரசு சோதனை நடத்தி வருகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 22, 2021, 03:06 PM IST
  • அவருக்கு சொந்தமான 22 இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை
  • ஊழல்கள் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
  • எங்களை அச்சுறுத்தவே அமைச்சர் வீட்டில் சோதனையை திமுக அரசு நடத்துகிறது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு- OPS அட்டாக் DMK title=

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் அவருக்கு சொந்தமான 22 இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், இதுக்குறித்து பேசிய முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள், இது பொய் வழக்கு, காழ்புணர்ச்சி காரணமாக திமுக அரசு சோதனை நடத்தி வருகிறது எனக் கூறியுள்ளனர்.

அதிமுக (AIADMK) ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் (AIADMK Vijayabhaskar) கடந்த 2016 ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தற்போது அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியிடம் தோல்வியை தழுவினார். அவர் அமைச்சராக இருந்த சமயத்தில், பல முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும் குற்றச்சாற்று எழுந்தது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் நடைபெற்ற முறைகேடுகள், ஊழல்கள் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து கரூரில் சாயப்பட்டறை உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்பின்னர் சென்னையில் உள்ள அவரது மற்றும் அவரது உதவியாளர்கள், வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

ALSO READ | அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு

முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டில் ரெய்டு நடைபெற்று வருவதால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ( O. Panneerselvam) மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது அவர்கள் பேசியதாவது, 

- அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை.
- திமுக அரசு (DMK Govt) பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.
- திமுக அரசு இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
- பொய் வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை.
- சட்டபூர்வமாக இதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. 
- எங்களை அச்சுறுத்தவே அமைச்சர் வீட்டில் சோதனையை திமுக அரசு நடத்துகிறது. 
- எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் வந்தாலும் எதிர்கொள்ள அதிமுக தயார். 

ALSO READ | அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் ரெய்டு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News