1.5 லட்சம் மின் மீட்டர்கள் மாற்றம் என மின்சார வாரியத்தின் அதிரடி அறிவிப்பு

TamilNadu electricity : தமிழ்நாடு முழுவதும் பழுதாகியிருக்கும் 1.5 லட்சம் மின் மீட்டர்களை விரைவில் மாற்றப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 27, 2024, 01:26 PM IST
  • தமிழகம் முழுவதும் மின் மீட்டர்கள் மாற்றம்
  • 1.5 லட்சம் மீட்டர்கள் மாற்றப்பட உள்ளது
  • தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் தகவல்
1.5 லட்சம் மின் மீட்டர்கள் மாற்றம் என மின்சார வாரியத்தின் அதிரடி அறிவிப்பு title=

பழைய மற்றும் பழுதான மின் மீட்டர்களை மாற்ற தமிழ்நாடு மின்சாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மின் மீட்டர்கள் பழுதடைந்தால் சரியான மின் பயன்பாடுகளை கணக்கிட முடியாது என்பதால், மாநிலம் முழுவதும் 12 மின் விநியோக மண்டலங்களில் இருக்கும் 1.55 லட்சத்துக்கும் அதிகமான மின் மீட்டர்களை விரைவில் மாற்ற மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இதுகுறித்து மின்சாரவாரியத்துறை அதிகாரிகள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழ்நாடு முழுவதும் 12 விநியோக மண்டலங்களில் மின் மீட்டர்கள் மாற்றப்பட இருக்கிறது. 

பழுதான மின் மீட்டர்கள் மாற்றம்

அதாவது, சென்னை வடக்கு மற்றும் காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய விநியோக வட்டங்களில் அதிகபட்சமாக 47,873 குறைபாடுள்ள மீட்டர்கள் கண்டறியப்பட்டுள்ளது. அவை அனைத்தும் விரைவில் மாற்றப்படவுள்ளது. பழுதான மீட்டர்களை மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டால், சராசரி நுகர்வு அடிப்படையில் அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வரும். இதன்காரணமாக பழுதடைந்த மின் மீட்டர்களை விரைவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்சார் ஒழுங்குமுறை ஆணையத்தின் செயல்திறன் விநியோகத் தரநிலைகள் விதிமுறைகளின்படி, நுகர்வோரிடமிருந்து புகார் பெற்றால், மீட்டர் சரியாக இல்லை, எரிந்ததாகக் கண்டறிந்தால் மின் வாரியம் 30 நாட்களுக்குள் மீட்டரை மாற்ற வேண்டும்.

மின் மீட்டர்கள் மாற்ற தாமதம் ஏன்?

பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டால் நுகர்வோருக்கு மின் வாரியம் இழப்பீடு வழங்க வேண்டும். ஒரு சில இடங்களில் மீட்டர்கள் கையிருப்பு இல்லாததால் பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. புதிய இணைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாலும் தாமதம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சமாளிக்க நுகர்வோர்கள் தங்கள் புதிய இணைப்புகளுக்கு நேரடியாக மீட்டர்களை தனியாரிடம் இருந்து வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.

தமிழ்நாடு முழுவதும் மின் மீட்டர் தட்டுப்பாடு

 மேலும், மாநிலம் முழுவதும் மீட்டர்களை விற்கும் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதால் மின் மீட்டர்களை கட்டம் கட்டமாக கொள்முதல் செய்து வருகிறோம், இதனால் சில இடங்களில் மீட்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது எனவும் மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். 

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News