குடைபோல பரந்து விரிந்த கொம்புகளைக் கொண்ட மூஸ் எனும் கடமான், காட்டில் வீடியோ எடுத்தவரை காத்திருக்கும் தாக்கும் வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பெரிய கடமான் ஒன்று நடந்து வர, அப்போது அங்கிருந்தவர் அதனைப் பார்த்து வியப்படைகிறார். மிக அருகாமையில் கடமானை பார்த்தும் ஆச்சரியத்தில் இருக்கும் அவர், கடமானை பார்த்து சற்று பயத்திலும் இருக்கிறார். ஏனென்றால் கடமானின் அணுகுமுறை கோபமாக இருப்பதைக் காட்டுகிறது. இருப்பினும் என்ன செய்கிறது என பார்க்கலாம் என்ற நினைப்பில் அவர் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென அந்த நபரை ஆக்ரோஷமாக தாக்க வருகிறது அந்த கடமான். இந்த வீடியோ தான் இப்போது எக்ஸ் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | அன்ன பறவைக் குஞ்சுகளுக்கு.... இதை விட சிறந்த Z+ பாதுகாப்பு இருக்க முடியுமா என்ன!
பலரும் அந்த வீடியோவில் கடமானை பார்த்ததும் ஆச்சரியப்படுவதற்கு காரணம், அதனுடைய கொம்பு தான். குடைபோல பரந்து விரிந்து கடமானின் கொம்பு இருக்கிறது. கடமானை ஆங்கிலத்தில் மூஸ் என அழைப்பார்கள். இந்த விலங்கு தமிழ்நாட்டின் நீலகிரி பகுதிகளில் இருக்கிறது. இந்தியாவின் பிற பகுதிகளிலும் கடமான்கள் இருக்கின்றன. உலக நாடுகளைப் பொறுத்தவரை வட அமெரிக்காவில் அதிகம் காணப்படுகிறது மூஸ். சைபீரியா காடுகள், ஐரோப்பா மற்றும் ஆசியாவிலும் குறிப்பிடத்தக்க எண்ணிகையில் மூஸ் இருக்கின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ