Home Remedies For Acidity: இன்றைய அவசர வாழ்க்கையில் நாம் அவ்வப்போது பசிக்காகவும் ருசிக்காகவும் பல வித உணவுகளை உட்கொள்கிறோம். ஆனால், இவற்றில் பெரும்பாலும் துரித உணவுகளும், பதப்படுத்தப்பட்ட உணவுகளும் இருக்கின்றன. இவை தற்காலிகமாக பசியை போக்கினாலும், இவற்றால் எந்த வித ஆரோக்கிய நன்மைகளும் கிடைப்பதில்லை. அதுமட்டுமின்றி இவற்றால் பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
இந்த உடல்நல பிரச்சனைகளில் ஒன்றுதான் வாயுத்தொல்லை. வாயுத்தொல்லைக்கு நாம் உட்கொள்ளும் உணவே முக்கிய காரணம் என்றாலும், இதற்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் அசிடிட்டி, வாயுத்தொல்லை ஆகியவை பலரை தொந்தரவு செய்யும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகிவிட்டது. புளிப்பு ஏப்பம், வயிறு எரிதல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் வாயுத்தொல்லைக்கான பொதுவான அறிகுறிகளாக உள்ளன. உங்களுக்கும் அசிடிடி, வாயுத்தொல்லை, புளித்த ஏப்பம் ஆகிய பிரச்சனைகள் உள்ளனவா? இருந்தாலும், கவலை கொள்ள வேண்டாம். சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் இந்தப் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் காணலாம். வாயுத்தொல்லை, அமிலத்தன்மை ஆகியவற்றை குறைக்க உதவும் சில பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
அமிலத்தன்மை ஏன் ஏற்படுகிறது?
வயிற்றில் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது அமிலத்தன்மை ஏற்படுகிறது. பல காரணங்களால் இது நிகழலாம். அவற்றில் சில காரணங்களை இங்கே காணலாம்.
- அதிக காரமான அல்லது வறுத்த உணவுகளை உட்கொள்வது.
- அதிகப்படியான காபி, டீ, மதுபானம் ஆகியவற்றை குடிப்பது.
- அதிக பதற்றம்
- சில மருந்துகளை உட்கொள்வது.
- ஆரோக்கியமற்ற உணவு
அமிலத்தன்மை மற்றும் வாயுத்தொல்லையை போக்க உதவும் சில பானங்கள் பற்றி இங்கே காணலாம்.
1. இஞ்சி நீர் (Ginger Water):
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இவை வயிற்று எரிச்சலைக் குறைக்க உதவும். இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். இதை குடிப்பதால் வாயுத்தொல்லையில் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
2. புதினா தேநீர் (Mint Tea):
புதினா வயிற்றை தணித்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது. புதினா இலைகளை கொதிக்க வைத்து டீ தயாரித்து தினமும் இரண்டு வேளை குடிக்கலாம். புதினாவில் உள்ள பண்புகள் வயிற்றின் பிற பிரச்சனைகளை நீக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.
3. திரிபலா நீர் (Triphala Water):
திரிபலா ஒரு ஆயுர்வேத மூலிகையாகும். இதன் நீர் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. திரிபலா பொடியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இது உடலுக்கு உஷ்ணத்தை அளித்து, ஜீரண சக்தியை அதிகரித்து கூடுதல் கொழுப்பையும் எரிக்க உதவுகின்றது.
4. தயிர் (Curd):
தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளன. இவை நல்ல குடல் பாக்டீரியாவை ஊக்குவித்து, செரிமானத்தை மேம்படுத்துகின்றன. தயிரை தனியாகவோ அல்லது காய்களை துருவிப்போட்டு பச்சடியாகவும் உட்கொள்ளலாம். இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
பிற தீர்வுகள்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பானங்கள் தவிர, அமிலத்தன்மையைத் தடுக்க இந்த வழிகளையும் பின்பற்றலாம்.
- ஒரே நேரத்தில் அதிகம் சாப்பிடாமல், சிறிய அளவில் குறுகிய இடைவெளியில் சாப்பிடலாம்.
- மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றை தவிர்க்கவும்
- புகைபிடிக்க வேண்டாம்
- காரம் அதிகம் உள்ள உணவுகளையும், வறுத்த உணவுகளையும் தவிர்க்கவும்.
- காபி, டீ, மதுபானம் ஆகியவற்றை உட்கொள்வதைக் குறைக்கவும்.
நீண்ட நாட்களாக அசிடிட்டி மற்றும் வாயுத்தொல்லையால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் நபர்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இரத்தத்தில் சேரும் நச்சுக்களை நீக்கும்... சூப்பர் டீடாக்ஸ் பானங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ