வாழ்க்கையில் குறுக்கிடும் தேவையற்ற நபர்களால் மன அழுத்தம், பதட்டம், சந்தேகம் உள்ளிட்டவை அதிகமாகும் என்பதால் அவர்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து அகற்றுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நம்மைச் சுற்றி பல வகையான ஆளுமைகள் இருப்பார்கள். நச்சுத்தன்மை கொண்டவர்களும் இருக்கவே செய்வார்கள். அவர்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து தூர விலக்கி வைப்பதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
அந்த நபர்கள் இருக்கும் வரை உங்களைச் சுற்றி மன அழுத்தம், பதட்டம், சோர்வு ஆகியவை இருந்து கொண்டே இருக்கும். உங்களுக்கு உள்ளே சந்தேகம் அடிக்கடி ஏற்படும். இது ஆரோக்கியமான விஷயம் இல்லை என்பதால் அவர்களிடம் இருந்து விலகியிருப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் மோசமான நபர்களை நீக்கும்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வளர்ச்சியில் நீங்கள் கவனம் செலுத்த முடியும். ஒருவரை உங்கள் வாழ்க்கையில் இருந்து முற்றிலும் நீக்கும்போது வருத்தம் ஏற்படுவது இயல்பு தான்.
ஆனால் அது குறித்து நினைப்பதைவிட உங்கள் மகிழ்ச்சி, வளர்ச்சியில் கவனம் செலுத்துவது அவசியம். உங்களுக்கு உதவுவதற்கு பதிலாக எதிரான விஷயங்கள் செய்கிறார்கள் என்றால் அவர்களை பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் மன ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.
ஒருவரிடமிருந்து விலகி இருக்கும்போது உங்களைப் பற்றி அவர்களிடம் விரிவாக விளக்க வேண்டிய அவசியமில்லை. இந்த முடிவு உங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்கானது. உங்கள் காரணங்களை அவர்களிடம் நியாயப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.
நீங்கள் ஒருவரைத் துண்டிக்க முடிவு செய்த பிறகு, அவர்களுடன் தொடர்பில் இருப்பது சில விஷயங்களை கடினமாக்கும். உங்கள் விருப்பத்தில் உறுதியாக இருங்கள். அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் எந்த விஷயத்துக்கும் முக்கியதுதவம் கொடுக்காதீர்கள்.
உங்கள் ஆற்றலை வீணடிக்கும் நபர்களுடன் நேரத்தை செலவிடுவது அபத்தமானது. உங்களை கவனித்துக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள். உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க ஆன்மீகம், யோகா ஆகியவற்றை பின்பற்றுங்கள்.
எதிர்மறையான நபர்களிடமிருந்து நீங்கள் விலகியவுடன், உங்கள் இலக்குகளை ஆதரிப்பவர்களுடன் ஐக்கியமாகிக் கொள்ளுங்கள். நீங்களும் வளருவீர்கள், அவர்களும் வளர்வார்கள்.