அதிமுக பொதுக்குழு களேபரத்துடன் நிறைவடைந்தது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் விடாப்பிடியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்த அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்ததாக அறிவித்தது. மேலும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை அங்கீகரிக்கும் தீர்மானங்களும் நிறைவேற்றப்படாததால், அந்தப் பதவிகள் காலியாகிவிட்டதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அறிவித்துள்ளார். ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | களமிறங்கும் சசிகலா - ஓபிஎஸ்ஸின் டெல்லி மூவ்! எடப்பாடி முக்கிய ஆலோசனை
எடப்பாடி பழனிசாமி தரப்பின் அடுத்தடுத்து அதிரடிகளால் அதிர்ந்து போயிருக்கும் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுவை முடித்த கையோடு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு பா.ஜ.க கூட்டணிக் கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு நேரில் ஆதரவு தெரிவித்த அவர், பிரதமர் மோடி மற்றும் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்ற வேட்புமனு தாக்கல் நிகழ்விலும் பங்கேற்றார். இந்த நிகழ்வுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பவில்லை. மக்களவை உறுப்பினராக இருக்கும் அவருடைய மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வீட்டில் தங்கியிருக்கும் அவர், இன்று பாஜகவின் முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளாராம்.
குறிப்பாக பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டுள்ளாராம். ஒருவேளை அனுமதி கிடைக்கும்பட்சத்தில் பிரதமர் மோடியை சந்திக்கும் நேரத்தில், அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தன்னுடைய குமுறலை வெளிப்படுத்த இருக்கிறாராம். எடப்பாடி பழனிசாமி தரப்பின் சர்வாதிகாரப்போக்கு உள்ளிட்டவைகளை எடுத்துரைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த சந்திப்புக்குப் பிறகு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்க இருக்கிறாராம். இதன்பிறகு சென்னை திரும்பும் பன்னீர்செல்வம், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | டெல்லியில் ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்! பொதுக்குழுவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR