நடிகர் விஜய், நேற்று தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 10-12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு நன்கொடை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில், விஜய் பேசிய சில கருத்துகள் அரசியல் ரீதியாக இருந்ததால் அது இவர் அரசியல்லில் எண்ட்ரி கொடுப்பதற்கான அற்குறியாக இருக்குமோ என சந்தேகித்தனர். தற்போது இதுகுறித்து சீமான் பேசியுள்ளார்.
மாணவர்களை சந்தித்த விஜய்:
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 10, 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக ஊக்கதொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடைப்பெற்றது. சென்னையில் நடந்த இந்த விழாவில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்க விஜய் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.
அரசியல் எண்ட்ரி?
நடிகர் விஜய், மாணவ மாணவிகளிடையே வாழ்க்கைக்கு தேவையான சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 600/600 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக வந்த நந்தினிக்கு வைர நெக்லஸ்ஸை அவர் பரிசளித்து சான்றிதழை வழங்கினார். மேடையில் பேசிய சில மாணவர்கள் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என கேட்டுக்கொண்டனர். விஜய்யும் அந்த ப்ளானில்தான் உள்ளதாக பலர் சந்தேகிக்கின்றனர். இந்த நிலையில், நடிகரும் அரசியல் பிரமுகருமான சீமான் விஜய்யின் அரசியல் எண்ட்ரி குறித்து பேசியுள்ளார்.
சீமான் பேட்டி..
சீமான், இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பெட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய் நேற்று பேசிய கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், விஜய் அரசியலுக்கு வரவுள்ளதால் இதுபோன்ற காரியங்களை வெளிப்படையாக செய்வதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நடிகர் சிவகுமார் மற்றும் அவரது பிள்ளை சூர்யா என அவர்கள் குடும்பமே பல வருடங்களாக நல்ல விஷயங்களை செய்து வருவதாகவும் ஆனால் அவை எதுவுமே வெளியில் தெரியவில்லை என்றும் பேசினர். விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாலும் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாலும் மாணவ மாணவிகளுக்கு உதவி செய்யும் செயலை வெளிப்படையாக செய்வதாக சீமான் கூறியிருந்தார். மேலும், நடிப்பது மட்டுமே ஒரு அரசியல் கட்சிக்கு தலைவனாவதற்கான தகுதியாக ஆகிவிட முடியாது எனவும் கூறியிருக்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தலை குறிவைக்கும் விஜய்?
நடிகர் விஜய், சில ஆண்டுகளாகவே தனது படங்களில் அரசியல் கலந்த வசனங்களாக பேசி வருகிறார். பல மேடை விழாக்களில் மக்களை கவர்வது போல பேசுவது, கருத்து கூறுவது, அரசியல் நடைமுறைகளை எடுத்துரைப்பது என்றிருந்தார். இதையே தற்போது ஃபாலோ செய்கிறார் விஜய். விஜய் அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ‘தலைவா’ படம் வந்த புதிதில் இருந்தே இருக்கிறது. ‘சர்கார்’ படத்தில் அதை கன்ஃபார்ம் செய்து விட்டனர். இதையடுத்து விஜய் விரைவில் அரசியலில் குதிக்கப்போகிறார் என்ற செய்தி பரவி வருகிறது. இந்த நிலையில், விஜய் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | தமிழ் சினிமாவில் இத்தனை ‘வாரிசு’ நடிகர்களா..! முடிவே இல்லாமல் நீளும் லிஸ்ட்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ