போஸ்ட் ஆபிஸ் பம்பர் திட்டம்! ரூ.5500 வீட்டில் உட்கார்ந்தபடியே மாதம் ஓய்வூதியம் பெறுங்கள்!

Post Office Monthly Income Scheme | போஸ்ட் ஆபீஸ் பம்பர் திட்டத்தில் முதலீடு செய்து வீட்டில் இருந்தபடியே 5500 ரூபாய் மாதம் பெறுவது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 28, 2024, 11:39 AM IST
  • போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்
  • மாதம் 5500 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்
  • முதலீட்டுக்கு உத்தரவாத திட்டம்
போஸ்ட் ஆபிஸ் பம்பர் திட்டம்! ரூ.5500 வீட்டில் உட்கார்ந்தபடியே மாதம் ஓய்வூதியம் பெறுங்கள்! title=

Post Office Monthly Income Scheme (POMIS) | போஸ்ட் ஆபீஸில் இருக்கும் பெரும்பாலான சேமிப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே பரவலான விழிப்புணர்வு இல்லை. இதனால் தவறான இடங்களில் முதலீடு செய்து பணத்தை இழப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். படித்தவர்கள் கூட சரியான முதலீடு தேர்வு செய்வதில் குழப்பத்துடன் இருப்பதை காண முடியும். நம் நாட்டை பொறுத்தவரை அதிக மக்கள் பொருளாதார ரீதியாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை எவ்வாறு பாதுகாப்பான முதலீடு செய்வது என்பதை தேடிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு, அதாவது பணத்தை சேமிக்க நினைப்பவர்களுக்கு சிறந்த முதலீடு சென்றால் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் தான். முதலீட்டு முழு பாதுகாப்பு உள்ளது. 

போஸ்ட் ஆபீஸில் இருக்கும் பெரும்பாலான திட்டங்கள் நல்ல வருமானத்தையும் தருகிறது. அந்தவகையில் ஓய்வூதியம் தேவைப்படும் குடிமக்களுக்காக போஸ்ட் ஆபீஸ் ஒரு நல்ல திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் பெயர் 'அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்' (Post Office Monthly Income Scheme). இந்தத் திட்டத்தில் ஒரே நேரத்தில் பணத்தை டெபாசிட் செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக வருமானம் பெறலாம். பாதுகாப்பான முதலீடு மற்றும் வழக்கமான வருமானத்தை விரும்புவோருக்கு இந்த திட்டம் மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. நீங்களும் இங்கு முதலீடு செய்து அதிக வருமானம் ஈட்டலாம்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் பரிசு: ஊதியக்குழுவுக்கு பதிலாக புதிய முறை, அதிக நன்மைகள்

POMISல் நீங்கள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். இந்தக் காலக்கட்டத்தில் உங்கள் முதலீட்டின் மீதான வட்டியை மாத வருமானமாகப் பெறுவீர்கள். இந்த திட்டம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடிமக்களுக்கு கிடைக்கிறது. இத்திட்டத்தைப் பெற, தபால் நிலையத்தில் கணக்கு தொடங்க வேண்டும். அருகிலுள்ள தபால் நிலையத்தில் தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் உடனடியாக கணக்கைத் தொடங்கலாம். கணக்கைத் தொடங்க, ஆதார் அட்டை, பான் கார்டு, மொபைல் எண் போன்ற ஆவணங்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் தேவை.

உங்களுக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?

இந்தத் திட்டம் தற்போது 7.4 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. சுவாரஸ்யமாக, TDS இதில் கழிக்கப்படவில்லை. அதனால் நமது மொத்த வருமானமும் நம்மிடமே இருக்கும். இந்திய அஞ்சல் துறையின் மற்ற சேமிப்புத் திட்டங்களைப் போலவே, இந்தத் திட்டமும் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.

இந்தத் திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது?

இந்த திட்டத்தில் முதலீடு ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்கலாம். ஒரு கணக்கில் அதிகபட்சம் ஒன்பது லட்சமும், கூட்டுக் கணக்கில் 15 லட்சமும் முதலீடு செய்யலாம். கணக்கில் முதலீடு செய்யப்படும் ஒன்பது லட்சங்கள் தற்போதைய 7.4 சதவீத வட்டி விகிதத்தில் மாதம் ரூ.5,500 பெறும்.இந்தத் தொகை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முறையாகப் பெறப்படும். ஓய்வுக்குப் பிறகு உங்களிடம் வழக்கமான வருமானம் இல்லை என்றால், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்காக வழக்கமான நிதி வருமானத்தை ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | ELI Scheme: EPFO அடுத்த ஆண்டு கொண்டுவரும் மெகா திட்டம், பயன்பெற இதை கண்டிப்பாக செய்து விடுங்கள்

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News