கோவை: MyV3 Ads செயலி உரிமையாளர் சிறையில் அடைப்பு - வாடிக்கையாளர்கள் பதற்றம்

கோவையில் MyV3 Ads உரிமையாளர் சத்யா ஆனந்த் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 15 நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 11, 2024, 10:19 AM IST
  • MyV3 Ads உரிமையாளர் கைது
  • கோவை மத்திய சிறையில் அடைப்பு
  • முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றம்
கோவை: MyV3 Ads செயலி உரிமையாளர் சிறையில் அடைப்பு - வாடிக்கையாளர்கள் பதற்றம் title=

கோவையில் MyV3 Ads செயலி நிறுவனம் சர்ச்சையில் சிக்கிய நிலையில், அதன் உரிமையாளரான சத்யா ஆனந்த் கைது செய்யப்பட்டு இப்போது 15 நாள் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்படுள்ளார். இதனால் அந்த நிறுவனத்தில் லட்சக்கணக்கில் முன்பணம் செலுத்தி உறுப்பினராக இருப்பவர்கள் பதற்றமடைய தொடங்கியுள்ளனர். விளம்பரம் பார்த்தால் காசு என மக்களை மூளைச் சலவை செய்து இந்த நிறுவனத்தின் போலியான திட்டத்தின் மூலம் லட்சகணக்கானோரை உறுப்பினர்களாக சேர்த்திருப்பதாகவும், இவர்கள் ஏமாற்றுவதற்குள் முன்னெச்சரிக்கையாக இந்த நிறுவனத்தில்  உறுப்பினர்களாக சேர்ந்திருக்கும் மக்கள் பணத்துக்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பிப்ரவரி 5 ஆம் தேதி கொடுக்கப்பட்ட இந்த புகார் குறித்து கோவை மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய நிலையில், MyV3 Ads உரிமையாளர் சத்யா ஆனந்த் தங்கள் நிறுவன உறுப்பினர்களை அண்மையில் கோவைக்கு அழைத்து நிறுவனத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்தவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். முன்னறிவிப்பின்றி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்துக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சத்யா ஆனந்த் மூலம்  MyV3 Ads உறுப்பினர்களை கலைந்து செல்ல வைத்தனர்.

மேலும் படிக்க | சென்னை மக்களே... ஜெமினி பிரிட்ஜ், நுங்கம்பாக்கத்தில் முக்கிய போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்

இருப்பினும் காவல்துறை MyV3 Ads நிறுவனம் குறித்து அதன் உரிமையாளர் சத்யா ஆனந்திடம் விசாரணையை தொடர்ந்தனர். இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையிலும்,  MyV3 Ads நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சத்யா ஆனந்த் தலைமையில் 70க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட காவல் ஆணையரகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த காவல்துறை உடனடியாக தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் நள்ளிரவில் MyV3 Ads நிறுவன சத்யா ஆனந்த், நள்ளிரவில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பதற்றம் அடைந்துள்ளனர். பலரும் சில ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்துள்ளனர். தொகைக்கு ஏற்ப சில ஆயிரங்களில் இருந்து லட்ச ரூபாய் வரையில் இந்த நிறுவனத்தில் திட்டம் இருக்கிறது. நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப தினமும் பார்க்கும் விளம்பரத்துக்கு பணம் கொடுக்கப்படும். அத்துடன் மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அந்த மருத்துகள் சந்தையில் 150 ரூபாய்க்கு கிடைக்கும் நிலையில், இந்த நிறுவனத்தில் சேர்ந்தவர்களிடம் 3 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிறுவனத்தின் பணப்பரிமாற்றம், ஜிஎஸ்டி எண் மற்றும் மருந்து விற்பனை குறித்தெல்லாம் காவல்துறை தீவிரமாக விசாரிக்க தொடங்கியிருக்கிறது. இந்த சூழலில் MyV3 Ads செயலி மற்றும் இணைய பக்கம் முடங்கியிருப்பதாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது. காவல்துறை MyV3 Ads இணைய பக்கத்தை முடக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நிறுவனம் தரப்பில் இருந்தே இத்தகைய தகவல் பரப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது. எப்படி பார்த்தாலும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் பதற்றம் அடைய தொடங்கியுள்ளனர். அவர்கள் மத்தியில் அரசு தேவையில்லாமல் நடவடிக்கை எடுத்திருப்பது போன்ற பிம்பத்தையும், கதைகளும் சொல்லப்பட்டு வருகிறது. விவரம் அறிந்தவர்கள் இது குறித்து கூறும்போது, MyV3 Ads நிறுவனத்தை மூட திட்டமிட்டிருந்தவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் அரசை காரணம் காட்டி முதலீடு பணத்தை தராமல் ஏமாற்றவும் வாய்ப்பு இருக்கிறது என கூறுகின்றனர். 

மேலும் படிக்க | தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்பி சீட் கொடுக்க முடியாது - பாஜக அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News