Budget 2025: ஓய்வூதிய உயர்வு, ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்.... பட்ஜெட்டில் EPFO அதிரடி அறிவிப்புகள்

Union Budget 2025: மத்திய மோடி அரசாங்கம் பணி ஓய்வுக்குப் பிறகான சமூகப் பாதுகாப்பின் கீழ் மூத்த குடிமக்களுக்கு கணிசமாக பயனளிக்கும் சில விருப்பங்களையும் திட்டங்களையும் பரிசீலித்து வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 13, 2025, 03:35 PM IST
  • ஓய்வு பெற்ற பிறகும் வருடாந்திர வட்டி கிடைக்கும்.
  • அதிகரிக்கும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்.
  • ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்.
Budget 2025: ஓய்வூதிய உயர்வு, ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்.... பட்ஜெட்டில் EPFO அதிரடி அறிவிப்புகள் title=

Union Budget 2025: இன்னும் சில நாட்களில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இதற்கான ஏற்பாடுகள் முழு மூச்சில் நடந்து வருகின்றன. பல்வேறு துறைகளை சார்ந்த பிரதிநிதிகள் தங்களுக்கான கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளை நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.

Budget 2025 Expectations: 

இந்த பட்ஜெட் குறித்து அனைத்து பிரிவுகளை சார்ந்த மக்களும், அனைத்து துறைகளும் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளன. மூத்த குடிமக்கள், பெண்கள், சம்பள வர்க்கத்தினர், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என அனைத்து பிரிவினருக்கும் பிரத்யேக எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடர்பாக வரக்கூடிய அறிவிப்புகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு முக்கிய அறிவிப்புகள் வருமா?

மத்திய மோடி அரசாங்கம் பணி ஓய்வுக்குப் பிறகான சமூகப் பாதுகாப்பின் கீழ் மூத்த குடிமக்களுக்கு கணிசமாக பயனளிக்கும் சில விருப்பங்களையும் திட்டங்களையும் பரிசீலித்து வருகிறது. ஆகையால், இபிஎஃப் சன்யாதாரர்களுக்கு இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிக ஓய்வூதிய பலன்

மத்திய அரசு செய்யவுள்ள மாற்றங்கள் பிஎஃப் உறுப்பினர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு அதிக ஓய்வூதிய பலனைத் தரும். அடுத்த நிதியாண்டில், அதாவது 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் சமூகப் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் ஒரு பெரிய அறிவிப்பையும் வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு பெரிய பரிசாக இருக்கும். இது நடந்தால், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும்.

Ministry of Labor and Employment: ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கான விருப்பங்களில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஏற்கனவே செயல்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய விருப்பங்களில், தொழிலாளர்கள் பல வகையான சலுகைகளைப் பெறுவார்கள். EPFO ​​-இல் உறுப்பினராக உள்ள தொழிலாளியின் இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்யப்பட்ட தொகையை ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியமாக மாற்றலாம். அதாவது, ஒரு ஊழியர் ஓய்வு காலத்தில் ஓய்வூதியம் தேவை என்று உணர்ந்தால், இபிஎஃப் நிதியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை ஓய்வூதிய நிதியில் சேர்க்கலாம். இது உங்கள் ஓய்வூதியத்தை கணிசமாக அதிகரிக்கும். 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 3 குட் நியூஸ்: டிஏ உயர்வு, டிஏ அரியர், ஊதியக்குழுவுக்கு பதிலாக புதிய முறை!!

Retirement: ஓய்வு பெற்ற பிறகும் வருடாந்திர வட்டி கிடைக்கும்

- ஒரு ஊழியர் 58 வயதில் ஓய்வு பெற்று 60 அல்லது 65 வயதில் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்க விரும்பினால், அப்படியும் செய்ய முடியும்.

- ஓய்வூதியம் தொடங்கும் வரை, வருடாந்திர வட்டியின் பலனும் இபிஎஃப் உறுப்பினருக்கு கிடைக்கும். 

- கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட இபிஎஃப் தொகைக்கு (EPF Amount) ஆண்டுதோறும் வட்டி தொடர்ந்து பெறப்படும். 

- ஊழியர் ஓய்வூதியம் பெறத் தொடங்கும் வயதைப் பொறுத்து அவருக்கு இந்த பம்பர் நன்மை கிடைக்கும்.

Pension Hike: ஓய்வூதிய உயர்வு

வரும் காலங்களில், இபிஎஃப்ஓ (EPFO) ​​உறுப்பினர்கள் வழக்கமான மாதாந்திர பங்களிப்புடன் கூடுதலாக ஒரு மொத்த தொகையை கணக்கில் டெபாசிட் செய்யவும் அனுமதிக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால், PF கணக்கில் தனித்தனியாக பங்களித்து, அதன் மூலம் உங்கள் நிதியை அதிகரிக்கலாம். அரசாங்கமும் இதில் உடன்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகின்றது.

EPS Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்

ஊழியர் ஓய்வுதியத் திட்டத்தின் (இபிஎஸ்) கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை ரூ.1000 -இலிருந்து ரூ.5000 ஆக அதிகரிக்க வேண்டும் என தொழிற்சங்க தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருவதால், இதற்கான அறிவிப்பு இந்த பட்ஜெட் 2025 -இல் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Wage Ceiling Hike: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்

இப்போது வரை ஊழியர்களுக்கு ஓய்வூதிய கணக்கீட்டுக்கான அடிப்படை சம்பளம் ரூ. 15,000 ஆக உள்ளது. இந்த வரம்பை ரூ.21,000 ஆக உயர்த்த அரசு தயாராகி வருவதாக கூறப்படுகின்றது. இதற்கான அறிவிப்பும் பட்ஜெட்டில் வரக்குடும். இது நடந்தால், ஊழியர்களுக்கு பெரிய அளவிலான நன்மைகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | SIP: பரஸ்பர நிதிய முதலீடு... மாதம் ரூ.3000 போதும்... ஓய்வின் போது ரூ.1 கோடி கையில் இருக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News