எம்.எல்.ஏ -களின் ஊதிய உயர்வு மசோதா-விற்கு டிடிவி மற்றும் திமுக-வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்!
தமிழக சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தொடரில், எம்.எல்.ஏ -களின் ஊதிய உயர்வு மசோதா தாக்கல் செய்யப்பட்டது, இந்த மசோதாவிற்கு எதிர்பு தெரிவித்து திமுக-வினர் வெளிநடப்பு செய்தனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்த கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் பழனிசாமி, சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கான மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் எம்.எல்.ஏ-களின் மாத ஊதியம் 55 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.1,50,000 ஆக அதிகரிக்கும். மேலும் அரியர்ஸ் தொகையுடன் சேர்த்து தலா ரூ. 3,50,000 பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
People will laugh at us for this hike when transport workers in the state are on strike demanding salary hike: DMK's MK Stalin on bill proposing hike in monthly salary for MLAs #TamilNadu pic.twitter.com/5i4Z8ORWPi
— ANI (@ANI) January 10, 2018