பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்க காவல்துறையினருக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 18, 2021, 08:01 AM IST
பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் title=

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், புதியதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Cheif Minister MK Stalin) காவல்துறையின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினார். அதில், காவல்துறை என்பது, குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத் தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத வகையில் சூழ்நிலையை உருவாக்கும். துறையாக செயல்பட வேண்டும். மேலும், பெண்கள் (Women Safety) மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை களைந்திட கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அத்துடன் பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை தலையாய கடமையாக கொண்டு செயல்பட வேண்டும். மேலும் காவலர்களுக்கான சலுகைகள், விடுப்புகள், வீட்டுவசதிக்கான வழிமுறைகளை மேம்படுத்த வேண்டும்.

ALSO READ | ரயிலில் பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க 'My Friend' திட்டம்

பேரிடர் காலங்களில் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் தீயணைப்பு துறைக்கு தேவையான பயிற்சிகளையும், உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்து சேவையாற்றிட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கும் தீ தடுப்பு நடவடிக்கைகளை பயிற்றுவித்து தீ விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். 

மேலும் சாலை பாதுகாப்பை வலுப்படுத்திட தகவல் மேலாண்மை மையம் ஏற்படுத்திட வேண்டும். விபத்துகள் நடந்த இடங்களை அறிவியல் பூர்வமாக பகுப்பாய்வு செய்திடவும், அதிக வாகன விபத்துகள் ஏற்படும் இடங்களுக்கு அருகாமையில் உள்ள கடைகள், உணவகங்களில் உள்ள நபர்களுக்கு முதலுதவி செய்யும் முறைகள் குறித்து பயிற்சி அளித்திட வேண்டும். பள்ளி மாணவ, மாணவியருக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் வாடகைக் கட்டடங்களில் இயங்கும் நீதிமன்றங்களுக்கு வரும் 5 ஆண்டுகளில் சொந்தக் கட்டடம் கட்டவும், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சிறைவாசிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் தோட்ட உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய அமைக்கப்பட்டுள்ள சிறை அங்காடியின் செயல்பாடு பணிகளை விரிவுப்படுத்த வேண்டும். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் மது அருந்துதல் மற்றும் போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணாக்கர்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் மூலம் மாவட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வுப் பேரணி, கருத்தரங்குகள், தெரு நாடகங்கள் போன்றவற்றை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ALSO READ | 14 ஆண்டுகளாக பாலியல் தொல்லை - மூன்று குழந்தைகளுக்கு தாயான பெண்

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் மது அருந்துதல் மற்றும் போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணாக்கர்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் மூலம் மாவட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வுப் பேரணி, கருத்தரங்குகள், தெரு நாடகங்கள் போன்றவற்றை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். 

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை முற்றிலும் ஒழித்திட வேண்டும். போலி மதுபானம் தயாரிப்பு, எரிசாராயம் கடத்தி விற்பனை செய்வது, பிறமாநில மதுபான வகைகளை கடத்தி விற்பனை செய்வது, ஆகியவற்றை தடுக்க வேண்டும். மனம் திருந்திய மதுவிலக்கு குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு நிதி அளிக்க வேண்டும். ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் கரன் சின்கா, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைத் தலைவர் சுனில்குமார் சிங், பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல்துறை கூடுதல் இயக்குநர் (நிர்வாகம்) எம். ரவி, காவல்துறை கூடுதல் இயக்குநர் (தலைமையகம்) சங்கர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பி. தாமரைக்கண்ணன்,  குற்றவியல் தொடர்வு இயக்குநர் சித்ராதேவி, தடயஅறிவியல் துறை இயக்குநர் சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதிக வாகன விபத்துகள் ஏற்படும் இடங்களுக்கு அருகாமையில் உள்ள கடைகள், உணவகங்களில் உள்ள நபர்களுக்கு  முதலுதவி செய்யும் முறைகள் குறித்து பயிற்சி அளித்திட வேண்டும்.

ALSO READ | Tamil Nadu: பொது மக்கள் புகார் அளிக்க முதலமைச்சர் தனிப்பிரிவு இணையதளம் துவக்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News