சென்னை: மேகதாது அணை அருகே காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடகாவின் திட்டம் (Karnataka Plan Mekedatu dam) குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (TN CM MK Stalin) ஜூலை 12 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேகதாது அணை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் பி எஸ் எடியூரப்பா (B S Yediyurappa) கூறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் கூட்டம் திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு தலைமை செயலகத்தில் (Tamil Nadu Secretariat) நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
ALSO READ | மேகதாதுவில் அணை கட்டும் பேச்சுக்கே இடமில்லை : TN Govt
நேற்று (வியாழக்கிழமை௦ பாமக தலைவர் எஸ்.ராமதாஸ், "அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, கர்நாடக முதலமைச்சரின் திட்டத்திற்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை மற்றும் சட்ட மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுடன் கலந்துரையாடி அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
முன்னதாக மேகதாதுவில் அணை கட்ட ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் அனுப்பட்டது. அதனைத்தொடர்ந்து மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை டெல்லியில் சந்தித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
ALSO READ | Mekedatu Issue: தமிழக அரசிடம் பேசுவது அவசியம் அற்றது -காங்கிரஸ் தலைவர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR