3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை பாடி கலைவாணர்நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி தனது தோழியுடன் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் கன்னியாகுமரி மாவட்டம் இருளப்பபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் ஆசை வார்த்தை கூறி, சிறுமியை கடற்கரையின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.
மேலும் படிக்க |திமுக தலைவர் ஸ்டாலின் காட்டிய அதிரடி - அடங்கி போன சேலம் நிர்வாகிகளின் ஆட்டம்
இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, செல்வராஜ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
3 வயது குழந்தையை பார்க்கும்போது இந்த சிந்தனை கூட சிலருக்கு வரும் என நினைத்தால் விந்தையாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. மனித குலம் மிருகத்தை விட கேவலமானது என்பதை நிரூபிக்க அவ்வப்போது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட கொடியவர்கள், காம வெறியர்கள், உணர்ச்சிகளை அடக்கமாட்டா வினோதப் பிறவிகள் வாழும் உலகில் நாமும் வாழ்கிறோம் என்று எண்ணும் போது நமக்கும் சிறிது அறுவெறுப்பாகத் தான் உள்ளது.
மேலும் படிக்க | 340 வருட வரலாற்றில் சென்னை மாநகராட்சியின் மேயராகிறார் இளம் பெண் பிரியா ராஜன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR