டெலிகிராம், வாட்ஸ்அப் மூலம் லட்சக்கணக்கில் மோசடி..! லைக் செய்யும் முன் உஷார் மக்களே!

தூத்துக்குடியில் டெலிகிராம் ஆப் மூலம் பார்ட் டைம் ஜாப் என மெசேஜ் அனுப்பி 46 லட்சம் ரூபாய் பண மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Written by - Bhuvaneshwari P S | Last Updated : May 25, 2023, 11:29 AM IST
  • டெலிகிராம் ஆப் மூலம் பார்ட் டைம் ஜாப்.
  • ஆசை காட்டி மோசம் செய்த நபர்.
  • லட்சக்கணக்கில் பண இழப்பு.
டெலிகிராம், வாட்ஸ்அப் மூலம் லட்சக்கணக்கில் மோசடி..! லைக் செய்யும் முன் உஷார் மக்களே! title=

தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரம் சின்னமணி நகரை சேர்ந்த தங்கதுரை என்பவர் டெலிகிராம் ஆப் பயன்படுத்திய போது அதில் Part Time Job தேவையா என்ற விளம்பரம் ஒரு மெயில் ID-யில் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து இந்த விளம்பரத்தை பார்த்து தங்கதுரை தனக்கு மெசேஜ் அனுப்பிய அந்த நபரிடம் பேசிய போது அவர்கள் FROSCH Travel Management Company நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், உலகம் முழுவதும் பல இடங்களில் செயல்பட்டு வருதாகவும் கூறியுள்ளனர். 

கொரோனா காலத்தில் தங்களுடைய கம்பெனியன் வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதை மேம்படுத்துவதற்காக  அதற்கு Star Ratings கொடுப்பதன் மூலம் மேற்படி கம்பெனியின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றும் கூறியுள்ளனர். அதோடு Star Ratings கொடுத்தால் கமிஷன் தருவதாகவும் தங்கதுரையிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து முதலில் சில ஆயிரங்கள் லாபம் கொடுப்பது போல கொடுத்து தங்கதுரையை நம்ப வைத்து பின்பு அதிக கமிஷன் வேண்டுமென்றால் பணத்தை முதலீடு செய்து அவர்கள் கூறும் பணிகளை செய்யும் படி தங்கதுரையிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து தங்கதுரை  பணத்தை முதலீடு செய்து பல்வேறு பணிகளுக்கு  பல்வேறு தவணைகளாக மொத்தம் 46 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளார். பின்னர், தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த தங்கதுரை இதுகுறித்து National Cyber crime Reporting Portal-ல் புகார் செய்துள்ளார்.

மேலும் படிக்க | நாடாளுமன்ற வளாகத்தில் தமிழரின் செங்கோல்! அப்படி என்ன சிறப்பு?

இதைத்தொடர்ந்து தங்கதுரை அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். 

அவரது உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு தங்கதுரையிடம் பணம் மோசடி செய்தவர் திருநெல்வேலியை சேர்ந்த எலியாஸ் பிரேம்குமார் என்பதை கண்டுபிடித்து கைது செய்தனர். 

அவரிடமிருந்த ஒரு லேப்டாப், ஒரு செல்போன், 9 சிம் கார்டுகள், 61 ஏடிஎம் கார்டுகள் மற்றும் பல்வேறு நிறுவன பெயர்களில் 12 போலி ரப்பர் ஸ்டாம்புகளையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் கைது செய்யப்பட்ட எலியாஸ் பிரேம்குமார் என்பவர் மேலும் பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் வங்கிகளில் சுமார் 21 வங்கி கணக்குகளை மோசடி செய்ய பயன்படுத்தியது தெரியவந்தது.  அதோடு அந்த வங்கிகளில்  சுமார் 25 கோடி ரூபாய்  வரை பணபரிவர்த்தனை நடந்துள்ளதும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று பல்வேறு Like and Review Scam சைபர் குற்றங்கள் Telegram மற்றும் Whatsapp மூலம் நடந்து வருகிறது.  முகம் தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு Youtube Review, movie Review, Location Review இதுபோன்று செய்யக் கூறினால் அவர்களை நம்பி பணத்தை முதலீடு  ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க | பூட்டே இல்லாமல் டாஸ்மாக் பார்களுக்கு சீல்! அதிகாரிகள் நடத்திய நாடகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News