Lok Sabha Elections: இன்னும் சில நாட்களில் நாடு முழுதும் மக்களவைத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள், பிரச்சாரங்கள் என நாடே களைகட்டியுள்ளது. தமிழகத்திலும் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. கட்சிகள் தங்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டன.
இந்த நிலையில், தமிழகத்தில் நேர்மையான கட்சி என்றால் அது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தான் எனவும் மூப்பனார் நாட்டின் பிரதமராகும் வாய்ப்பை குடும்ப கட்சிகள் செய்த சதியால் இழந்து விட்டதாகவும் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.
கோவை ஆடிஸ் வீதியில் உள்ள மூப்பனார் பவனில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக கோவை பாராளுமன்ற வேட்பாளரான பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துக் கொண்டார் .
அறிமுக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் பிஜேபி கூட்டணியில் உள்ளது . தமிழகத்தின் ஊழலற்ற , நேர்மையான கட்சி என்றால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தான். ஒரிஜினல் காங்கிரஸ்காரர்கள் என்றால் தமிழ் மாநில காங்கிரஸ் காரர்கள் தான். இப்போது இருக்கும் காங்கிரஸ் கட்சியினர்கள் கிடையாது. நாட்டின் பிரதமராக வர வேண்டியவர் மூப்பனார். குடும்பகட்சி காரணமாக அவரால் வர முடியவில்லை. இதை பிரதமர் சேலத்தில் பங்குபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட பேசி இருப்பார்." என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | ஈரோடு எம்பி கணேசமூர்த்தி விஷம் அருந்த இது தான் காரணமா? அதிர்ச்சி தகவல்!
"பிரதமர் மோடி ஜி கே வாசன் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சிகரர்கள் நேர்மையாக வாழ்ந்தவர்கள் எனவும் கதர் சட்டை காரர்கள் எனவும் அழைக்கபோடுபவர்கள். ஜி கே வாசன் அவர்களுக்கும் எனக்கும் நல்ல நட்பு உள்ளது. தமிழகத்தில் வெற்றி கூட்டணி இது. தமிழகத்தில் தனித்து நிற்க வேண்டும் என்பதையும் இந்த கூட்டணியை முதலில் ஆதரித்தவர் ஐயா ஜிகே வாசன். இந்த கூட்டணியை வழிநடத்துபவரும் கூட என்று நான் வழிமொழிகிறேன். எல்லா கூட்டணிக் கட்சி தலைவர்களையும் அனுசரித்துச் செல்லக்கூடிய குணம் படைத்தவர் ஜி கே வாசன். இந்த தெர்தலில் முதன் முதலாக 3 இடத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி பெறுவார்கள். மோடி அவர்கள் 400 இடங்களில் வெற்றி பெறுவார். தேர்தலுக்காக அமைந்த கூட்டணி இல்லை இது. நமது நோக்கம் கோவையில் வளர்ச்சியை கொண்டு வர வேண்டும், தொழில் நகரம் கலாசாரத்தை கொண்டு வர வேண்டும் என்பது. அடுத்தகட்ட தலைமுறை நன்றாக வளர வேண்டும் என்பது நமது இலட்சியம்." என்று மேலும் தெரிவித்தார்.
கூட்டணி கட்சி தொண்டர்கள் தங்கள் பணிகளை செவ்வனே செய்வார்கள் என்று கூறிய அண்ணாமலை, குறைந்த பட்சம் அனைவரும் 50 வீடுகளுக்கு சென்று தேர்தல் பணி செய்ய வேண்டும் என்றும் 25 நாட்கள் இதை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் படிக்க | கையில் தாமரையுடன் கோயிலில் வழிபட்ட தமிழிசை... நாளை வேட்பு மனு தாக்கல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ