உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டது: தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 100 சதவீதம் நேர்மையாக நடத்தப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 4, 2020, 02:00 PM IST
உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டது: தேர்தல் ஆணையம்! title=

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 100 சதவீதம் நேர்மையாக நடத்தப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. 

இந்நிலையில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், தேர்தல் ஆணைய அலுவலகத்தில், தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் எந்த முறைகேடும் 100 சதவீதம் நேர்மையாக நடத்தப்பட்டது. பெரிய கலவரம், வன்முறை எதுவும் இன்றி உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் வரும் 6-ம் தேதி காலை 10 மணக்கு பதவியேற்பார்கள். உள்ளாட்சி தேர்தலில் தவறு ஏதேனும் நடந்திருந்தால் வீடியோ ஆதாரம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். 

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் குளறுபடி என்பதை நாங்கள் ஏற்க முடியாது. ஏனெனில் நாங்கள் அதனை மேற்கொள்ளவில்லை இவ்வாறு அவர் கூறினார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News