பெரியார் சிலை கனல் கண்ணன் சர்ச்சை பேச்சு: காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Kanal Kannan Controversy: கனல் கண்ணன் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு  உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 1ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 29, 2022, 11:57 AM IST
  • பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசியது தொடர்பான வழக்கில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.
  • கனல் கண்ணன் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசியிருந்தார்.
பெரியார் சிலை கனல் கண்ணன் சர்ச்சை பேச்சு: காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு title=

பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்டண்ட் மாஸ்டர்  கனல் கண்ணன் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி  காவல்துறைக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1  ஆம் தேதி நடந்த கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென  பேசியிருந்தார்.

இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன் அளித்த புகாரின் அடிப்படையில், கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 

இந்த வழக்கில்  ஆகஸ்ட் 15 ஆம் தேதி கைது  செய்யப்பட்ட கனல் கண்ணன், ஜாமீன் கோரிய மனுக்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தாலும், முதன்மை அமர்வு நீதிமன்றத்தாலும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மேலும் படிக்க | பெரியார் சிலை குறித்து பேசிய கனல்கண்ணன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி 

அவரது மனுவில்,  நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் பேசவில்லை என்றும்,  கோவிலின் முன்  சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துரதிஷ்டவசமாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கனல் கண்ணன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, கனல் கண்ணன் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு  உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 1ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

மேலும் படிக்க | அரசுப் பேருந்து கட்டண உயர்த்தப்படுமா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News