கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு - முதலமைச்சரை சந்திக்க பெற்றோர் முடிவு

விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜிப்மர் மருத்துவ அறிக்கை கேட்டு மனு தாக்கல் செய்த கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் முதலமைச்சரை சந்திக்க முடிவு செய்திருக்கின்றனர்

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 23, 2022, 01:37 PM IST
  • கள்ளக்குறிச்சியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்
  • அதனையடுத்து அவர் படித்த பள்ளி சூறையாடப்பட்டது
  • மாணவியின் பெற்றோர் முதலமைச்சரை சந்திக்க முடிவு
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு - முதலமைச்சரை சந்திக்க பெற்றோர் முடிவு title=

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி மாணவி ஒருவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 17ஆம் தேதி பள்ளி அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது. பள்ளி நிர்வாகம் சார்பில் நிர்வாகிகள் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில்,உயிரிழந்த மாணவியின் இரண்டாவது உடற்கூராய்வு அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழுவினர் நேற்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர. மேலும் ஸ்ரீமதியின் நெருங்கிய தோழிகள் இரண்டு பேரிடம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் பெற்றார்.

இந்நிலையில் இன்று தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாணவியின் பெற்றோரான தந்தை ராமலிங்கம் தாயார் செல்வி ஆகியோர் ஜிப்மர் மருத்துவ பரிசோதனை அறிக்கையினை கேட்டு மனு தாக்கல் செய்தனர். 

மேலும் படிக்க | தூக்கு மாட்டிக் கொள்ளும் வீடியோ பதிவு செய்து, 9ம் வகுப்பு மாணவன் தற்கொலை!

இதனையடுத்து மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் பேசுகையில், தங்கள் மனு மீது விசாரணை நடத்தி மாணவியின் உடற் கூறாய்வு அறிக்கையை தங்களுக்கு தருமாறு மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், வாக்குமூலம் பெறப்பட்ட இரண்டு பேரும் உண்மையில் மாணவியின் தோழிகள்தானா என்பது குறித்து தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமெனவும் கூறினார். 

மாணவியின் தாய் செல்வி பேசுகையில், “எனது மகளின் இறப்பிற்கு நீதி வேண்டி எங்கள் சொந்த ஊரிலிருந்து வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபயணமாக சென்று தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என மனு கொடுக்கவிருக்கிறோம். சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை தமிழக அரசே எடுத்து நடத்தவேண்டும். கடந்த காலங்களில் இந்தப் பள்ளியில் ஏழு கொலைகள் நடந்திருக்கின்றன. 

மேலும் படிக்க | காவல்துறையினர் கால்களை பிடித்துக்கொண்டு கதறி அழுத சகோதரிகள்: சேலத்தில் பரபரப்பு

எனது மகள் இறந்து 43 நாட்கள் ஆகியும் இதுவரை உண்மை தன்மை தெரியவில்லை. பள்ளி நிர்வாகத்திற்கு 90 சதவீதம் அரசு அதிகாரிகள் விலை போய் இருக்கின்றனர்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News