ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரயில் மறியல்: முக ஸ்டாலின் கைது

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க கோரி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க வினர். இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Last Updated : Jan 20, 2017, 11:10 AM IST
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரயில் மறியல்: முக ஸ்டாலின் கைது title=

சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க கோரி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க வினர். இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாம்பலம் ரயில் நிலையத்தில் ரயில் முன்பு அமர்ந்து மறியல் செய்தார்.

இதற்காக மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கான தி.மு.கவினர் காலையிலேயே திரண்டனர். அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று மாம்பலம் ரயில் நிலைய வாயிலை அடைந்தனர்.

போலீசார் அங்கு வைத்திருந்த தடுப்புகளை தி.மு.க வினர் அதை அகற்றி மு.க.ஸ்டாலின் ரயில் நிலையம் செல்ல வழி அமைத்து கொடுத்தனர். அவர் மற்றும் தி.மு.கவினர் நடைமேடை வழியாக மாம்பலம் ரயில் நிலையத்திற்குள் சென்றனர்.

கடற்கரை- தாம்பரம் இடையேயான ரயில் முன்பு தண்டவாளத்தில் அமர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கான தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன், எம்.எல்.ஏக்கள் அண்ணாநகர் மோகன், கு.செல்வம், மற்றும் திண்டுக்கல் லியோனி, டாக்டர் கனிமொழி, ஐ. கென்னடி, பகுதி செயலாளர்கள் ஏழுமலை, ஜெ. கருணாநிதி, ராமலிங்கம், வேலு, காமராஜ், மதன் மோகன், பகுதி துணை செயலாளர்கள் சேப்பாக்கம் சிதம்பரம், மாரி, பாண்டிபஜார் பாபா சுரேஷ், சோம சுந்தரம், சேழியன், பூச்சி முருகன் உள்பட ஏராளமான தி.மு.க வினர் பங்கேற்றனர்.

ரயில் முன்பு மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தி.மு.க வினரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் அங்கிருந்து வேன் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தி.மு.கவினர் ரயில் மறியல் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Trending News