புத்தாண்டில் தடைகளை தகர்த்து சாதனை படைப்போம்- முதல்வர் EPS

புத்தாண்டில் தடைகளை தகர்த்து சாதனைகளை படைப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Last Updated : Dec 31, 2019, 11:25 AM IST
புத்தாண்டில் தடைகளை தகர்த்து சாதனை படைப்போம்- முதல்வர் EPS title=

புத்தாண்டில் தடைகளை தகர்த்து சாதனைகளை படைப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

2019 முடிவடைந்து, புதிய ஆண்டான 2020 வரும் ஜனவரி 1-ஆம் தேதி வரவுள்ளது. 2020 ஆண்டை வரவேற்க உலகமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இதற்காக தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். பல இந்து கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

மெரினா கடற்கரையில் கூடுபவர்கள் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, பலூன்கள் பறக்கவிட்டு புத்தாண்டை வரவேற்பார்கள். அதேசமயம் சிலர் சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பல்வேறு இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். 

இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

புத்தம்புது பொலிவுடன் மலரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வெற்றிகளைப் பெற்று, புதிய சாதனைகளைப் படைத்து, வளமான தமிழகத்தை படைத்திடுவோம் என இந்த ஆங்கிலப் புத்தாண்டில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

இந்த இனிய புத்தாண்டில், அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும், வளம் பெருகட்டும், அமைதி நிலவட்டும் என்று வாழ்த்தி, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

மேலும் உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News