மனைவியை கடப்பாரையால் அடித்துக்கொன்ற கணவன்.. !

ஆசை பட பாணியில் மனைவியின் சகோதரியை அடைய ஆசைப்பட்ட கணவர் அதற்கு இடையூராக இருந்த மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Dayana Rosilin | Last Updated : Apr 12, 2022, 05:31 PM IST
  • மனைவியின் சகோதரி மீது ஏற்பட்ட காதல்
  • மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்
  • குற்றவாளியை கைது செய்த போலீஸார்
மனைவியை கடப்பாரையால் அடித்துக்கொன்ற கணவன்.. ! title=

  மாவட்டம் ஆதியூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு  துர்கா தேவி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் பெருமாளும், துர்கா தேவியும் கோயில் திருவிழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காக பொம்மிகுப்பம் பகுதியில் உள்ள  துர்கா தேவியின் தாயார் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, கணவன் மனைவி இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த பெருமாள் அருகே கிடந்த இரும்புக் கடப்பாரையை எடுத்து துர்கா தேவியின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த துர்கா தேவி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதனையடுத்து அலரல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய துர்கா தேவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், செல்லும் வழியிலேயே துர்கா தேவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், துர்கா தேவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் தனது மனைவியின் சகோதரியை தான் ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாகவும், இது தொடர்பாக எழுந்த வாக்கு வாதத்தில் சண்டை முற்றிப்போகவே ஆத்திரத்தில் மனைவியை அடித்துக்கொன்றதாகவும் பெருமாள் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து பெருமாளை நீதிபதி முன்பு ஆஜர் படுத்திய போலீஸார் பின்னர் சிறையில் அடைத்தனர்.

மனைவியின் சகோதரி மீது கொண்ட காதலால் 16 வருடங்கள் தன்னுடன் வாழ்ந்த மனைவியை கணவன் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | கோவை: மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை - மெடிக்கல் ஷாப் ஓனர் கைது

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News