இப்தார் நோன்பு திறப்பு
நாடு முழுவதும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நடைபெற்று வரும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் பகுதிகளுக்குட்பட்ட தொகுதியில் பங்கேற்று வருகின்றனர். அதிமுக சார்பிலும் இப்தார் நோன்பு திறப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்து மதத்தில் இருக்கும் ஜாதிய தீண்டாமைகளை எதிர்த்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்கள் இங்கிருக்கும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவர்களின் முன்னோர்கள் என கூறியுள்ளார்.
மேலும் படிக்க | அண்ணாமலை மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்!
அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள எம் கே மஹாலில் நோன்பு திறக்கும் நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், பிஜேபி ஆட்சியில் மத வெறியை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட நினைக்கின்றனர். கர்நாடக மாநிலத்தில் பிஜேபி ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு கொடுத்து இருக்கின்ற நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்துள்ளனர். உச்சநீதிமன்றம் இதையெல்லாம் நிறுத்தக்கூடாது கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்துக்களே இஸ்லாமியர்கள்
இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் எல்லாம் அரேபியாவில் இருந்து வந்தவர்கள் இல்லை. அரேபியாவிற்கு பல பேர் போயிருக்கவே மாட்டார்கள். இங்கிருக்கும் முஸ்லிம்களின் முன்னோர்கள் சனாதன கொள்கை, இந்து மதத்தில் இருக்கிற ஜாதிய வேறுபாடு வெறித்தனத்தின் காரணமாக இஸ்லாமியர்களாக, கிறிஸ்தவர்களாக மாறி இருக்கிறார்கள். மற்றபடி நாமெல்லாம் ஒன்றுதான். நாம் எல்லாம் ஒன்று என்பதுதான் திராவிடம் மாடல் ஆட்சி. அம்பேத்கர் சிலைக்கு மாலை போட பாஜகவினருக்கு என்ன தகுதி இருக்கிறது?. பாஜகவின் அரசியலை அனைவருக்கும் உணர்த்த வேண்டும். நம்மை பிரித்து சண்டையிட வைக்க பாஜக முயற்சிக்கிறது என்று ஆவேசமாக பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ