திருப்பூரில் ஈஷாவின் 'மரம் நட விரும்பு' நிகழ்ச்சி.. பொதுமக்களும் பங்கேற்கலாம்..!!

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருப்பூரில் வரும் பிப்ரவரி 7-ம் தேதி நடக்கும் ‘மரம் நட விரும்பு’ நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று மரம் நடலாம்.

Last Updated : Feb 5, 2021, 09:28 PM IST
  • மக்களில் பலருக்கும் மரம் நட வேண்டும் என்ற ஆசை இருக்கும், ஆனால் எங்கு நடுவது அதை எப்படி பராமரிப்பது என்று தெரியாமல் இருப்பர்.
  • சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக ‘மரம் நட விரும்பு’ என்ற நிகழ்ச்சி வெவ்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
  • இம்முயற்சி தமிழக விவசாயிகளிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
திருப்பூரில் ஈஷாவின் 'மரம் நட விரும்பு' நிகழ்ச்சி.. பொதுமக்களும் பங்கேற்கலாம்..!! title=

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருப்பூரில் வரும் பிப்ரவரி 7-ம் தேதி நடக்கும் ‘மரம் நட விரும்பு’ நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று மரம் நடலாம்.

மண்ணின் வளத்தையும் விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிப்பதற்காக மரம் சார்ந்த விவசாயத்தை காவேரி கூக்குரல் இயக்கம் ஊக்குவித்து வருகிறது. ஈஷா அறக்கட்டளையின் (Isha Foundation)முயற்சி தமிழக விவசாயிகளிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் காவேரி கூக்குரல் (Cauvery Calling)  இயக்கத்தின் வழிகாட்டுதலுடன் தங்கள் நிலங்களில் மதிப்புமிக்க மரங்கள் நடும் பணியை விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் செய்து வருகின்றனர்.

இப்பணியில் விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாகவும் ‘மரம் நட விரும்பு’ என்ற நிகழ்ச்சி வெவ்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா, இச்சிபட்டி கிராமத்தில் உள்ள விவசாயி திரு.சிவசாமி அவர்களின் நிலத்தில் மரம் நடும் பணி வரும் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெற உள்ளது. 9 ஏக்கர் பரப்பில் நடக்கும் இப்பணியில் சுற்றுச்சூழல் மீது ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று மரம் நடலாம். விருப்பம் உள்ளவர்கள் 94425 90016 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ALSO READ | விவசாயத்தில் ஒரு யுகப்புரட்சி - விவசாயத்திற்கு விவசாயியே தீர்வான கதை

மக்களில் பலருக்கும் மரம் நட வேண்டும் என்ற ஆசை இருக்கும், ஆனால் எங்கு நடுவது அதை எப்படி பராமரிப்பது என்று தெரியாமல் இருப்பர். இப்படி மரம் நடவு செய்ய விரும்பும் மர ஆர்வலர்கள் சொந்தமாக நிலம் இல்லாவிட்டாலும் அவர்களும் மரம் நடும் பணியில் தங்களை இணைத்துக் கொள்ள காவிரி கூக்குரல் இயக்கம் (Cauvery Caling) ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News