தேர்தல் பறக்கும் படை சோதனை! 2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்!

காஞ்சிபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது கிட்டத்தட்ட 2 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Mar 19, 2024, 09:00 AM IST
  • தேர்தல் பறக்கும் படை சோதனை.
  • 2 கோடி மதிப்பிலான நகைகள் சிக்கியது.
  • அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தேர்தல் பறக்கும் படை சோதனை! 2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்! title=

காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 2 கோடி ரூபாய்க்கு மேலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  ஜிஆர்டி நகைக்கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது விசாரணையில் தெரியவர தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.  வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் அலுவலர்கள் பல குழுக்களாக பிரிந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | கோவை: பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோடுஷோ! அப்போ நடந்த சுவாரஸ்ய சம்பவம்

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் பகுதியில் பறக்கும் படையினர் ஆய்வு செய்து வந்த நிலையில் நேற்று இரவு அங்கு வந்த வேனை மடக்கி ஆய்வு செய்தனர். அதில் புதிய தங்க ஆபரணங்கள் சில கோடி மதிப்பில் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த வண்டியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்து விசாரணை செய்ததில், சென்னையில் மிகப் பிரபலமான ஜிஆர்டி நகைக்கடையில் இருந்து தமிழகம் எங்கும் உள்ள அதனுடைய கிளைகளுக்கு நகைகளை எடுத்துச் செல்லும் வாகனம் என்றும், அவ்வாறு நேற்று காலை புறப்பட்டு ஆவடி, பட்டாபிராம், திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் உள்ள தங்களது கிளைகளுக்கு நகைகளை கொடுத்து விட்டு அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டு கிளைக்கு நகைகளை எடுத்துச் சென்ற பொழுது காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் பகுதியில் பறக்கும் படையினர் தங்களை மடக்கி ஆய்வு செய்ததாக தெரியவந்தது.

அந்த வண்டியில் உள்ள ஆபரணங்கள் குறித்தும் அந்த தனியார் நகை நிறுவனத்திடம்  உள்ள ஆவணங்கள் குறித்தும் காவல்துறையினரும், தேர்தல் அலுவலரும் ஆய்வு செய்து தொடர் விசாரணை செய்து  வருகின்றனர். காஞ்சிபுரம் அருகே 2 கோடிக்கு மேலான தங்க நகைகள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே போல நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பாபு சரவணன் தலைமையில் வாகன தணிக்கை ‌ நடைபெற்றது. அப்போது அவ்வழியே பைக்கில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது அதில் பணம் ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 318 இருந்ததை கண்டுபிடித்த தேர்தல் பறக்கும் படையினர் அவர்கள் இருவரிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது அவர்கள் இருவரும் ஹரி கிருஷ்ணன், சுரேஷ் என்பதும், சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் வங்கியில்  பணியாற்றுவதாகவும், மகளிருக்கு வழங்கப்பட்ட குழு கடன் பணம் வசூலித்து செல்வதாக தெரிவித்தனர். இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு சென்றதால் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் அலுவலர் உமாசங்கர் மற்றும் தாசில்தார் மாரிமுத்துவிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க | O Panneerselvam : அதிமுக சின்னம், கொடியை ஓ.பி.எஸ் பயன்படுத்தக்கூடாது - நீதிமன்றம் தீர்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News