நடிகர் கமல் ஹாசன் டெங்கு விழிப்புனர்வு குறித்து தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றினை வைத்துள்ளார்!
தமிழகத்தில் டெங்கு காய்சல் பலரது உயிரை பதம் பார்த்து வரும் நிலையில், தமிழக தலைவர்கள் பலரும் டெங்குவில் இருந்து மக்களை காக்க நிலவேம்பு கசாயத்தினை விநியோகித்து வந்தனர்.
இதனையடுத்து நிலவேம்பு கசாயத்தினை குடிப்பதினால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வந்தன.
இந்நிலையில், முழுமையான ஆராய்ச்சி முடிவுகள் வரமால் நிலவேம்பு கசாயத்தினை விநியோகம் செய்ய வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு நடிகர் கமல் ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளதாவது:-
சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்
— Kamal Haasan (@ikamalhaasan) October 18, 2017
"சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்"
ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்யவேண்டுமென்றில்லை பாரம்பரியக காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்
— Kamal Haasan (@ikamalhaasan) October 18, 2017
"ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்யவேண்டுமென்றில்லை பாரம்பரியக காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்"
என குறிப்பிட்டுள்ளார்!