உனக்கு முதுகெலும்பில்லை, கம்னு உட்கார் என ஓ.பி.ரவீந்திரநாத்தை எச்சரித்த டி.ஆர்.பாலு

மக்களவையில் டி.ஆர்.பாலு பேசும் போது, தொடர்ந்து குறிக்கிட்டு பேசியதால் ஓ.பி.ரவீந்திரநாத்தை பார்த்து உனக்கு முதுகெலும்பில்லை, கம்னு உட்கார் என ஆவேசமாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 6, 2019, 04:26 PM IST
உனக்கு முதுகெலும்பில்லை, கம்னு உட்கார் என ஓ.பி.ரவீந்திரநாத்தை எச்சரித்த டி.ஆர்.பாலு title=

புது தில்லி: மக்களவையில் தமிழகத்தில் இருந்து சென்ற ஒரே அதிமுக எம்.பி. ஆன ஓ.பி.ரவீந்திரநாத்தை பார்த்து உனக்கெல்லாம் முதுகெலும்பில்லை, கம்னு உட்கார் என ஆவேசமாக திமுகவின் நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கூறியதால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து, அதிகாரம் அளிக்கும் 370 மற்றும் 35 ஏ-வது பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அந்த மாநிலம் ஜம்மு- காஷ்மீர் என ஒரு யூனியன் பிரதேசம், லடாக் என மற்றொரு யூனியன் பிரதேசம் என இரு பகுதிகளாக பிரிக்கப்படுவதாகவும், இதில் ஜம்மு-காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் என்றுகே கூறி ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை தாக்கல் செய்தார். நாடு முழுவதும், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையும், பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து மாநிலங்களவையில், திமுக, காங்கிரஸ் உட்பட சில கட்சிகள் இந்த மசோதாவிற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மாசோதா மீது விவதாம் நடைபெற்று, இறுதியாக வாக்கெடுப்பு மூலம் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மக்களவையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது. 

அப்பொழுது திமுகவின் நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு பேசினார். அப்பொழுது ஜம்மு காஷ்மீர விவகாரத்தில் பாஜக ஏதோ பெரிய நன்மை செய்துவிட்டது போல பெருமிதம் கொண்டு பேசி வருகிறது. ஆனால் மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜகவால் படுதோல்வி அடைந்தது என்பதை மனதில் வைத்துகொள்ள வேண்டும் எனப பேசிக்கொண்டு இருக்கும் போது, அதிமுக-பாஜக கூட்டணி சார்பாக வெற்றி பெற்ற தேனி தொகுதியின் ஒரே ஒரு அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குறுக்கிட்டு பேசிக் கொண்டிருந்தார். ஆனால் எதிர்ப்பு தெரிவித்தும், தொடர்ந்து குறிக்கிட்டு பேசிக்கொண்டே இருந்ததால், ஆத்திரமடைந்த திமுகவின் நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மக்களவை என்பது முதுகெலும்புள்ளவர்கள் பேசும் இடம். உனக்கெல்லாம் முதுகெலும்பில்லை, கம்னு உட்கார் என ஆவேசமாகப பேசினார். இதனையடுத்து பாஜக உட்பட என்டிஏ கூட்டணி எம.பி.-க்கள் டி.ஆர்.பாலு எதிராக கோசங்களை எழுப்பினார்கள்.

Trending News