அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி உள்ளது? சமீபத்திய தகவல்!

நெஞ்சு வலியால் பெங்களூர் நாராயண இருதாலையா மருத்துவமனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Aug 13, 2023, 08:56 AM IST
  • நெஞ்சு வலியால் அன்பில் மகேஷ் அனுமதி.
  • இருதாலையா மருத்துவமனையில் அனுமதி.
  • அமைச்சர்கள், எம்எல்ஏ உள்ளிட்டோரும் வருகை.
அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி உள்ளது? சமீபத்திய தகவல்! title=

தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு தருமபுரி வழியாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொள்ள காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது காரிமங்கலம் அருகே சென்ற போது அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யா மொழிக்கு திடீரென நெஞ்சு வலிஏற்பட்டதால் கார் ஓட்டுனரை அருகே உள்ள மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினார், இதன் பின்னர் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கிருஷ்ணகிரியில் அரசு நிகழ்வில் இருந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் உணவுதுறை அமைச்சர் சக்கரபாணி உடனிருந்த நிலையில் கிருஷ்ணகிரி, ஒசூர் வழியாக பெங்களூர் நாராயண இருதாலையா மருத்துவமனைக்குள் சென்றிருக்கிறார்.

மேலும் படிக்க | நாங்குநேரி சாதிய தாக்குதல்: மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை என்ன தெரியுமா?

அவருக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை, பரிசோதனைக்கு பிறகு பெங்களூர் விமான நிலையம் மூலம் சென்னை புறப்பட இருப்பதாக திமுகவினர் தெரிவித்தனர்.  அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் இருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டு நாராயணா இருதாலையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ECG., ECO, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் மேற்க்கொள்ளப்பட்டதில் எவ்வித பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அலைச்சல் காரணமாக அவருக்கு ஓய்வு தேவை என்பதற்காக ஞாயிற்றுக்கிழமை வரை மருத்துவமனையில் இருப்பார், அமைச்சர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக கூறினார்.  பின்னர் ஒசூர் எம்எல்ஏவும், கிருஷ்ணகிரி மேற்கு திமுக மாவட்ட செயலாளரான Y.பிரகாஷ் அளித்த பேட்டியில், காரிமங்கலம் பகுதியில் லேசான நெஞ்சு வலி ஏற்ப்பட்டதால் அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் நாராயண இருதாலையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனைகள் மட்டும் தேவைப்பட்டது.  ஞாயிற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் ஆவார் என கூறினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன் , ஓசூர் மாநகர மேயர் S.A.சத்யா, முன்னாள் எம்பி சுகவனம் மற்றும் திமுக தொண்டர்கள் ஏராளமான இருந்தனர்.

இந்த அசம்பாவிதத்திற்கு முன் சேலத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகளோடு இணைந்து செயல்பட வேண்டும் என  தெரிவித்தார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு, 5 மாவட்டத்தை சேர்ந்த 408 தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகளை வழங்கினர்.

விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும் போது, மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குறைந்த நாட்களில் 70 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளனர் என்பதை பெருமையோடு கூறிய அவர், அரசு பள்ளிகளை மேம்படுத்திட முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். அரசு பள்ளியோ, தனியார் பள்ளியோ, சிபிசி பள்ளிகளோ எதுவானாலும்,அதில் பயிலும் மாணவர்கள் கல்வி தான் முக்கியம் என்றும் தனியார் பள்ளி நிர்வாகத்தினரின் கோரிக்கை நிச்சியம் நிறைவேற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகளோடு இணைந்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கல்வி சேவையை தொடர்ந்து மாணவ மானவியர்களின் நலனில் அக்கறை செலுத்திட வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

மேலும் படிக்க | நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News