இதுவரை கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் 6344 பேருக்கு கொரோனா சோதனை!

சென்னையில் உள்ள கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் இதுவரை 6344 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை கிடைத்த முடிவுகளின் படி 210 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு (COVID-19 Positive) உள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 17, 2020, 05:38 PM IST
  • 210 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
  • கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் இதுவரை 6344 பேருக்கு கொரோனா சோதனை.
  • மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும்.
  • நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 1,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுவரை கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் 6344 பேருக்கு கொரோனா சோதனை! title=

சென்னை:  தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால், மாநிலம் முழுவதும் கல்லூரிகள் திறக்க அரசு அனுமதி அளித்தது. கல்வியாளர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில், கல்லூரி மாணவர்களுக்கு தமிழகத்தில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் சில நாட்களிலேயே மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்கள் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு கொரோனா தொற்று (COVID-19) இருப்பது தெரியவந்தது.  மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து ஐஐடி (IIT Madras) மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் (Annamalai University) சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் சென்னை மட்டுமில்லை, மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்தார்.

No description available.

தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி, சென்னையில் உள்ள கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் இதுவரை 6344 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை கிடைத்த முடிவுகளின் படி 210 பேருக்கு கொரோனா தொற்று (COVID-19 Positive) பாதிப்பு உள்ளது. அதேநேரத்தில் 2361 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்னும் வர வேண்டி உள்ளது. அதேபோல 3773 பேருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் கூறப்பட்டு உள்ளது.

ALSO READ |  உங்களுக்கும் COVID-19 ஏற்பட்டிருக்கலாம்: இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்ததா?

நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 1,132 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டது. கொரோனா (Coronavirus) தொற்றால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 359 பேருக்கு தொற்று ஏற்பட்டது. தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 8,01,169 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 11,919 ஆக உயர்ந்தது.

அதேநேரத்தில் நேற்று 1,210 பேர் குணமடைந்து (Today's Discharged) வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 7,79,291 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 11,073 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 66,213பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 1,30,86,807* பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ |  IIT-M, Anna University: அதிகரிக்கும் தொற்று, பிற கல்லூரிகளில் குறையும் மாணவர் வருகை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News