வங்கக் கடலில் மீண்டும் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை மையம்

வருகிற 10-ஆம் தேதி முதல் வட மாவட்டங்களில் கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தகவல்! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 9, 2018, 02:58 PM IST
வங்கக் கடலில் மீண்டும் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை மையம் title=

வருகிற 10-ஆம் தேதி முதல் வட மாவட்டங்களில் கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தகவல்! 

கடந்த மாதம் 25-ந் தேதிக்கு மேல் பல நாட்கள் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவியது. கடந்த 3-ந் தேதி முதல் 2 நாட்கள் தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்தது. நேற்று முன்தினம் அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து மேலடுக்கு சுழற்சியாக இருக்கிறது.

இப்போது அதே வங்கக் கடல் பகுதியில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உருவாக இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்நிலையில், சென்னை வானிலை மையம் இது குறித்து தெரிவ்விக்கையில், 

அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து மேலடுக்கு சுழற்சியாக இருக்கிறது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து வரும் நாட்களை பொறுத்து தான் கணிக்க முடியும். தற்போதுள்ள நிலவரப்படி தமிழகத்தில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்யும். தாழ்வு பகுதி வலுப்பெறும் பட்சத்தில் புயல் சின்னமாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இப்போது எதையும் உறுதியாக கூற முடியாது.

மேலும், தற்போது பெய்துள்ள மழையின் அளவானது நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில்,‘செங்கோட்டையில் 3 செ.மீ, ஆரணி, ஆய்க்குடியில் தலா ஒரு செ.மீ.’ மழை பெய்துள்ளது.

 

Trending News