சென்னையில், அண்ணாநகர், ஜெ.ஜெ. நகர், கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் ஐந்து தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னையில், உள்ள பிரபலமான ஐந்து தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளிகள் சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளான அண்ணா நகர், ஜெ.ஜெ.நகர், கோபாலபுரம், பாரிமுனை, ஆர்.ஏ.புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கின்றன. இந்த பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் சார்பில், அனைத்து மாணவர்களின் பெற்றோருக்கும் தகவல் அனுப்பி, பள்ளிக்கு வந்து மாணவர்களை அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் படிக்க | விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் உறங்க போய்விட்டார்- புதிய தமிழகம் கிருஷ்ணசாமி விமர்சனம்
மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியோடு பள்ளிக்கு விரைந்து வந்து வெடிகுண்டுகள் இருக்கிறதா என்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த ஐந்து பள்ளிகளிலும் பெற்றோர் குவியத் தொடங்கினர். இதனால், பள்ளி இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்களும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்திகளைப் பார்த்தவர்களும் அச்சம் அடைந்தனர்.
இந்த நிலையில், மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியிருக்கிறார்கள். மின்னஞ்சல் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிரட்டல் விடுத்தவரின் மின்னஞ்சல்:
ஐந்து தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள நபர் யாரென்று போலீஸார் தேடி வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல், johonsol01@gmail.com என்ற மின்னஞ்சலில் இருந்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | காஞ்சி அத்திவரதர் கோவில்; விறுவிறுப்பாக நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ