Cholesterol Control Tips: கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளதா? இயற்கையான வழிகளில் சரி செய்யலாம்.
Cholesterol Control Tips: நமது நரம்புகளில் படியும் கெட்ட கொலஸ்ட்ரால் பல வித நோய்களுக்கு மூலகாரணமாக கருதப்படுகிறது. இரத்தத்தில் பிளேக் அதிகரிக்கும் போது, அது நமது நரம்புகளில் குவிந்து, அதன் காரணமாக அடைப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக, இரத்தம் இதயத்தை அடைய கடினமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இந்த நிலை உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது. இது கரோனரி தமனி நோய், மூன்று நாள நோய், மாரடைப்பு, இதய செயலிழப்பு, மூளை பக்கவாதம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியமாகும்.
சில எளிய இயற்கையான வழிகள் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் கொண்டு வரலாம். இவை எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. கெட்ட கொழுப்பை குறைகக் உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெந்நீர்: பொதுவாகவே தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. ஆனால், வெந்நீர் குடிப்பது கூடுதல் நன்மை அளிக்கும். குறிப்பாக கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள் அடிக்கடி வெந்நீர் குடித்தால், கொலஸ்ட்ராலை வேகமாக எரிக்கலாம். இது கலோரிகளை எரிக்கவும் உதவும். வெந்நீர் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும்.
இஞ்சி: இஞ்சியில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது நமது உடலில் செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இஞ்சியை பல வித உணவுகளில் சேர்த்து உட்கொள்ளலாம். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இது நரம்புகளில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க பெரிய அளவில் உதவும்.
நெல்லிக்காய்: நெல்லிக்காய் ஆரோக்கியத்தின் பொக்கிஷமாக கருதப்படுகின்றது. இதில் அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவற்றின் மூலம் கொலஸ்ட்ரால் அளவை பெருமளவு குறைக்கலாம். கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் கண்டிப்பாக தினமும் நெல்லிக்காய் உட்கொள்ளலாம்.
மஞ்சள்: நமது இந்திய சமையலில் மஞ்சள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. இதில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. கொலஸ்ட்ராலை குறைக்க நினைப்பவர்கள் தினமும் வெந்நீரில் மஞ்சள் கலந்து குடிக்கலாம். இது வேகமாக கொழுப்பை குறைக்க உதவும். கொலஸ்ட்ராலை குறைக்க வெதுவெதுப்பான பாலிலும் மஞ்சள் கலந்து குடிக்கலாம்.
சோம்பு: சோம்பு இயற்கையான வழியில் நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது. ஆனால் அது கொலஸ்ட்ராலையும் குறைக்கும் என்பது மிகச் சிலருக்குத்தான் தெரியும். இதற்கு சோம்பை இரவில் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வடிகட்டி அந்த தண்ணீரை குடிக்கலாம்.
பூண்டு: பூண்டு பல வித உணவுகளில் சேர்க்கப்படுகின்றது. இது உணவின் சுவைவையும் வாசத்தையும் மேம்படுத்துகின்றது. இதுமட்டுமின்றி பூண்டில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. குறிப்பாக உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள் தினமும் 2-3 பூண்டு பற்களை உட்கொள்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.