சென்னை: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (AIBEA) உயர்மட்ட தலைவர் ஒருவர் கூறுகையில், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக வங்கியாளர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நாட்டில் வங்கி நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளார். மேலும் நாடு முழுவதும் ஏடிஎம்களின் செயல்பாடும் செயலிழக்கக்கூடும் என்றார்.
AIBEA பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடச்சலம் கூறுகையில், "மும்பை, சென்னை மற்றும் டெல்லியில் சுமார் 23,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 31 லட்சம் காசோலைகள் வேலைநிறுத்தம் காரணமாக நிலுவையில் உள்ளது. பெரும்பாலான வங்கி மற்றும் அதன் கிளைகள் வேலை நிறுத்தம் காரணமாக மூடப்பட்டிள்ளன. பணத்தை டெபாசிட் செய்யவோ திரும்பப் பெறவோ முடியாது எனக் கூறியுள்ளார்.
வங்கித் துறையில் ஒன்பது தொழிற்சங்கங்களைக் கொண்ட யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (The United Forum of Bank Unions - UFBU) ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
வங்கி அதிகாரி வெங்கடச்சலம் கூறுகையில், "தற்போது வரை கிடைத்த தகவலின் படி, நாடு முழுவதும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், டெல்லி, பஞ்சாப், குஜராத், கர்நாடகா, கேரளா, பீகார் போன்ற மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன" என்றார்.
நவம்பர் 2017 முதல் வங்கி ஊழியர்களின் ஊதிய திருத்தத் தீர்வு இன்னும் முழுமையடைய வில்லை. ஜனவரி 30 ஆம் தேதி மும்பையில் நிர்வாகத்திற்கும் வங்கி தொழிற்சங்கங்களுக்கும் இடையில் நடைபெற்ற கூட்டத்தில் கடைசி நிமிடம் விவாதிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் பிரச்சினைகள் முடிவு எட்டப்படவில்லை என்று என்று வெங்கடச்சலம் தெரிவித்தார்.
எனவே ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என தொழிற்சங்கங்கள் முடிவு செய்தன. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை இருக்கும். இதன் காரணமாக சாமானிய மக்கள் நிறைய கஷ்டங்களை சந்திக்க நேரிடும் என்றார்.
இந்த நிதியாண்டுக்கான பொருளாதார திட்டம் மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி முன்வைக்க உள்ள நிலையில், இரண்டு நாட்கள் வங்கியாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.