அரியலூரில் பாஜக - விசிக மோதல்
அரியலூர் - நரசிங்க பாளையம் கிராம வாக்குச்சாவடி அருகே பாஜக, விசிக கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று வாலிபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்கபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சுமார் ஒரு மணி அளவில் வாக்குச்சாவடி மையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிலர் கூட்டமாக இருந்தாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Actor Vijay: பேண்டேஜ் உடன் வாக்களித்த விஜய்... படப்பிடிப்பில் காயமா?
விசிகவினர் மூன்று பேர் படுகாயம்
இது குறித்து பாஜகவை சேர்ந்த அருண், வாக்குச்சாவடியில் பாதுகாப்பில் இருந்த போலீசாரிடம் புகார் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விசிகவினர் பாஜகவை சேர்ந்த அருணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். பாஜகவை சேர்ந்த அருண் மற்றும் விசிகவை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் அஜித், செல்வராஜ் மகன் செல்வகுமார் ஆகிய மூவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதில் பாஜகவை சேர்ந்த அருணுக்கு மண்டை உடைந்தது. இதனையடுத்து படுகாயம் அடைந்த மூன்று பேரும் ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருமணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வாக்குச்சாவடி மையத்தில் போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் பணி அமர்த்தப்பட்டவுடன் வாக்குப்பதிவு ஒரு மணி நேர தாமதமாகி பின்னர் மீண்டும் தொடங்கியது. நரசிங்கபாளையம் வாக்குச்சாவடி மையம் ஏற்கனவே பதற்றமான வாக்கு சாவடி மையம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஏற்பட்ட மோதலால் சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் நரசிங்க பாளையம் கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் அதிமுக, திமுக மோதல்
இதேபோல், தூத்துக்குடி எஸ் எஸ் பிள்ளை மார்க்கெட் அருகே அமைந்துள்ள வடக்கு பத்திரகாளி அம்மன் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்குள் திமுகவை சேர்ந்த வெளி நபர்கள் உள்ளே வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் ஆகியோருக்கிடையே மோதல் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. அந்த வாக்குச்சாவடியில் அதிமுக மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு வாக்களிக்க சென்றுள்ளார். அப்போது அவருடன் வாக்களிக்க அதிமுகவினரும் சென்றுள்ளனர்.
காவல்துறையினர் சமசரம்
இந்நிலையில் வாக்குச்சாவடி மையத்திற்குள் திமுகவை சேர்ந்த அந்த பகுதிக்கு சம்பந்தம் இல்லாத பூத் ஏஜெண்டும், இல்லாத தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த அதிர்ஷ்டராஜ் என்ற திமுக நிர்வாகி சில திமுக கட்சியினர்களுடன் வந்துள்ளார். இதற்கு அதிமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடையே மோதல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, அங்கு வந்த வடபாகம் காவல் ஆய்வாளர். பிரேம் ஆனந்த் தலைமையில் காவல்துறையினர் இரு தரப்பையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க | Lok Sabha Elections 2024: தமிழ்நாட்டில் தேர்தலை புறக்கணிக்கும் ‘சில’ கிராமங்கள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ