எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டி காத்த கட்சி இப்போது சிலரிடம் சிக்கித் தவிக்கிறது: டிடிவி தினகரன்

எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிகாத்த இயக்கம் இது. ஒரு சிலரின் ஆணவத்தால், பதவி வெறியால், சுயநலத்தால் சிக்கி இருக்கின்றது: டிடிவி தினகரன்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 15, 2022, 01:10 PM IST
  • எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிகாத்த இயக்கம் இது: டிடிவி தினகரன்.
  • தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வில்லை: டிடிவி தினகரன்.
  • திராவிட மாடல் என கூறிக்கொண்டு வரிசுமையை ஏற்றி துன்படுத்துகின்றது: டிடிவி தினகரன்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டி காத்த கட்சி இப்போது சிலரிடம் சிக்கித் தவிக்கிறது: டிடிவி தினகரன் title=

அறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவை அண்ணா சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரயாதை செலுத்தினார். தொண்டர்களுடன் வந்த டிடிவி தினகரன் அண்ணா உள்ளிட்ட தலைவருக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், 'அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து வீர அஞ்சலி செலுத்தி இருக்கிறோம். மேலும் இன்னொரு கட்சி (அதிமுக) யில் நடக்கும்  கூத்தை  பற்றி பதில்சொல்ல வேண்டியதில்லை. மேலும் அது நீதிமன்றத்தில் போராடி கொண்டு இருக்கின்றது. தமிழக மக்கள் பார்த்து கொண்டு இருக்கின்றனர்' என கூறினார். 

‘எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிகாத்த இயக்கம் இது. ஒரு சிலரின் ஆணவத்தால், பதவி வெறியால், சுயநலத்தால் சிக்கி இருக்கின்றது. இதற்கு காலம் பதில் சொல்லும், எல்லாம் சரியாகிவிடும். தேர்தல் நேரத்தில் கொடுத்த  வாக்குறுதிகளை  திமுக நிறைவேற்ற வில்லை. திராவிட மாடல் என கூறிக்கொண்டு வரிசுமையை ஏற்றி துன்படுத்துகின்றது. 

மேலும் படிக்க | காலை உணவு திட்டத்தின் மெனு: சிறுதானியம் முதல் ரவா கிச்சடி வரை 

துன்பபடுத்துவதுதான்  திராவிட மாடல் என்பதை திமுக நிரூபித்து வருகின்றது. இதற்கு  நாடாளுமன்ற   தேர்தலில் மக்கள் பதில் சொல்வார்கள்’ என  கூறினார்.

மேலும் ‘எந்த மொழியையும், எந்த மாநிலத்திலும் திணிக்க கூடாது. தமிழகத்தை பொறுத்த வரை மக்கள் விரும்பி ஏற்று கொள்ளாமல், திணித்தால்  ஏற்று கொள்ள மாட்டார்கள். கொரொனா பாதிப்பால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்டியை  குறைக்க வேண்டும். கடந்த திமுக ஆட்சியில்  மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வால் தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டணம்  மக்களால் ஏற்கும் அளவிற்கு இருக்க வேண்டும். வாட்டி வதைக்கும் வகையில் இருக்க கூடாது’ என கூறிய அவர், ‘முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தி ஊழலை ஒழிப்போம், முறைகேடுகளை அனுமதிக்க மாட்டோம் என்ற வாக்குறுதிகளை மட்டும் செயல்படுத்தினால் போதாது’ என்றார். 

‘நீட் தேர்வு ரத்து, ஆயிரம் ருபாய், சொத்து வரி குறைப்பு என பல வேறு வாக்குறுதிகளை திமுக  நிறைவேற்ற வில்லை. திமுகவினர்  திருந்தவே மாட்டார்கள் என மக்கள உணர்கின்றனர். எடப்பாடி ஆட்சி மீது கோபம் அடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை போல இந்த ஆட்சியும் மாறும். அண்ணா , பெரியார், தமிழ், திராவிடம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி திமுக தனது குடும்பத்தை வளர்த்து இருக்கின்றது. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை’ என அவர்மூலும் கூறினார்.

மேலும் படிக்க | பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் - உருவ சிலைக்கு மாலை அணிவித்தார் முதலமைச்சர் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News