மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதற்கு ஆளும் திமுக அரசை அதிமுக கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. முறையான வடிகால் அமைப்புகளை மேற்கொள்ளாமல் விட்டதே சென்னையில் பெரும்பாலான இடங்களில் வெள்ளநீர் தேங்கியதற்கு காரணம் என தெரிவித்துள்ளது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் முந்தைய ஆட்சியை குறை சொல்லும் திமுக, 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வடிகால் அமைப்புகளை அமைத்தாக கூறிய லட்சணம் இதுதானா? என்று வினவியுள்ளது. மதுரையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் இதே கேள்வியை மீண்டும் ஒருமுறை எழுப்பியிருக்கிறார்.
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு புத்தாடைகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு கூறுகையில் "சென்னையில் மழை நீர் வடிவதற்கு 4000 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிவதற்கு வடிகால் அமைக்கப்பட்டதாக தமிழக அரசு கூறியிருந்தது. ஆனால் 4 கோடி ரூபாய்க்கு கூட மழைநீர் வடிகால் அமைக்கவில்லை. திமுக தலைமையிலான அரசு பேச்சோடு சரி, எந்த ஒரு செயல்பாடுகளும் செய்யவில்லை.
திமுக அரசு புயல் முன்னச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களுக்கு திருப்திகரமாக இல்லை. திமுக தலைமையிலான தமிழக அரசு திறனற்ற அரசாக உள்ளது. திமுக உண்மையான சுயமரியாதை இயக்கமாக செயல்படவில்லை. திமுகவினர் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார்கள். அதே நேரத்தில் தங்களை சுயமரியாதைக்காரர்கள் என காட்டிக்கொண்டு சிறுபான்மை மக்களை ஏமாற்றி வருகிறார்கள். நடிகர் விஜயகாந்த் உடல்நலம் தேறி வர வேண்டுமென அன்னை மீனாட்சியை வேண்டிக்கொள்கிறேன். சினிமாவில் எம்ஜிஆர் போலவே விஜயகாந்தும் தாங்கள் உண்ணும் உணவைத்தான் சக ஊழியர்களுக்கும் வழங்குவார்கள். சினிமாவிலும் அரசியலிலும் விஜயகாந்த் கரை படியாக கரத்திற்கு சொந்தக்காரர் ஆவார்" என புகழாரம் சூட்டினார்.
மேலும் படிக்க | சென்னை புயலில் மனிதர்கள் உள்ளே! முதலைகள் வெளியே... மிக்ஜாம் சூறாவளி வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ