தமிழகத்தில் 10 இடங்களில் திங்கள்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
தமிழகத்தில் நேற்று முதல் அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்திரி வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் வெயில் வெளுத்து வாங்கியது.
சேலம், மதுரை விமான நிலையத்தில் தலா 102 டிகிரியும், தருமபுரி, பாளையங்கோட்டை, திருச்சியில் தலா 101 டிகிரியும், கோயம்புத்தூர், நாமக்கல், திருத்தணி, வேலூரில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது.,
கோடைகாலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் இதே நிலை தான் தொடரம். சேலம், கரூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் முதல் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது.
100 டிகிரியும் வெப்பநிலை பதிவான இடங்களின் பட்டியல்.....
கரூர் - 104 டிகிரி
சேலம் - 102 டிகிரி
மதுரை - 102 டிகிரி
தருமபுரி - 101 டிகிரி
பாளையங்கோட்டை - 101 டிகிரி
திருச்சி - 101 டிகிரி
கோயம்புத்தூர் - 100 டிகிரி
நாமக்கல் - 100 டிகிரி
திருத்தணி - 100 டிகிரி
வேலூர் -100 டிகிரி