தமிழகத்தில் மிகப்பெரிய சைவ ஹோட்டல்களில் ஒன்று தான் அடையார் ஆனந்த பவன். பல்வேறு கிளைகள் இந்த ஹோட்டலுக்கு உள்ளது. இந்த ஹோட்டலின் உரிமையாளர் கே.டி.சீனிவாச ராஜா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். பிரபல நடிகரான சித்ரா லஷ்மணன் தான் இந்த பேட்டியை எடுத்தார். அதில் சீனிவாச ராஜா விடம், வெஜ் ஹோட்டல்களை பிராமணர்கள் வசம் தான் இருந்தது என்றும் அப்புறம் எப்படி நீங்கள் செய்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சீனிவாச ராஜா, யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பண்ணலாம் என்று மாற்றிக்காட்டியவர் தந்தை பெரியார். அவர் தான் இதற்கு காரணம் என்றும், காலம் மாறியது என்றும் அரசு ஆதரவு கிடைத்ததாகவும் பேசியுள்ளார்.
மேலும் படிக்க | 5 ஆயிரம் குழந்தைகள் காப்பகங்கள்: ஸ்மிருதி இரானி அறிவிப்பு
இந்த பேட்டி தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த பேட்டியை பகிர்ந்துள்ள நெட்டிசன் ஒருவர், இந்துக்களின் ஒரு சமுதாயத்தின் மீது வன்மத்தை கக்கும் அடையார் ஆனந்த பவனை புறக்கணிப்போம் என்று எக்ஸ்-ல் பதிவிட்டார். மோதிலால் என்ற ஐடியில் இருந்து வெளியிடப்பட்ட பதிவில், பிராமணர்கள் கையில் ஹோட்டல்கள் இருந்தவரை இவ்வளவு மருத்துவமனைகளைக்கு அவசியமே இல்லாமல் இருந்தது என்றும், இப்போது எவ்வளவு ஹோட்டல்கள் உள்ளதோ அதே அளவு மருத்துவமனைகளும் உருவாகியுள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.
இப்படி சிலர் அடையார் ஆனந்த பவனுக்கு எதிராக பதிவிட ஆதரவாகவும் பலர் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், சீனிவாச ராஜா சொன்னதில் தப்பில்லை என்றும், பெரியார் காலத்தில் பிராமணர் அல்லாதோர் ஓட்டல் நடத்தவோ அங்கு உட்கார்ந்து சாப்பிடவோ அனுமதி இல்லை என்றும் எழுதியுள்ளார். அதோடு தந்தை பெரியார் தான் மக்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் சூழலை உருவாக்கியவர் என்று உரக்கச்சொல்வதில் என்ன பிரச்சனை என்றும் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
உணவில் எதற்கு சாதியை பார்க்கிறீர்கள்.. பசி என்பது பொதுவான ஒன்று என்ற குரலும் இந்த சர்ச்சைகளுக்கு நடுவே எழுந்துள்ளது.
சித்ரா லட்சுமணன் தானே இந்த கேள்வியை கேட்டார் ஆனால் அவரை விட்டுவிட்டு ஏன் அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் மீது வன்மத்தை காட்டுகிறீர்கள் என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். சமீப காலமாக இப்படி யூடியூப் பேட்டியில் பேசும் பிரபலங்கள் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. டி இமானை அடுத்து இப்போது சீனிவாச ராஜாவின் பேட்டியும் படு வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | மாணவர்களின் ஆடையை கிழிக்கும் மாடலாக உள்ளது ஒன்றிய அரசு-அமைச்சர் அன்பில் மகேஷ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ