மதுரையில் அதிமுகவின் பிரம்மாண்ட மாநாடு! எடப்பாடி பழனிசாமியின் மாஸ்டர் பிளான்!

அதிமுகவின் மதுரை மாநாடு வரும் பாராளுமன்றத்தில் வெற்றியாக எதிரொலிக்கும் என முன்னால் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேட்டி அளித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jul 3, 2023, 09:05 AM IST
  • திமுக ஆட்சிக்கு வந்து எந்தவித திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.
  • அதிமுக கொண்டு வந்த திட்டங்களை மட்டுமே தற்போது நிறைவேற்றி வருகிறார்கள்.
  • 234 தொகுதிகளில் அஇதிமுக வெற்றி பெரும்.
மதுரையில் அதிமுகவின் பிரம்மாண்ட மாநாடு! எடப்பாடி பழனிசாமியின் மாஸ்டர் பிளான்! title=

கோவை மாவட்டம் வால்பாறை நகர்ப்புற பகுதியில் அதிமுகவின் கட்சி அலுவலகத்தை அதிமுக முன்னால் அமைச்சர் எஸ் பி வேலுமணி திறந்து வைத்தார், இதையடுத்து அய்யர் பாடி, சோலையார், மாணிக்கா பகுதிகளில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது, இதில் தமிழகத்தில் 2 கோடி உறுப்பினர்கள் கட்சிக்கு சேர்க்க வேண்டும் எனவும் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு வருட காலத்தில் எந்தவித திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை, அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை மட்டுமே தற்போது நிறைவேற்றி வருகிறார்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களிடம் மீண்டும் எடப்பாடி யார் ஆட்சி வரவேண்டும் என தெரிவிக்கின்றனர், பாராளுமன்றத்தில் 40க்கு 40ம்தற்போது இடைத்தேர்தல் வைத்தாலும் 234 தொகுதிகளில் அஇஅதிமுக வெற்றி பெற்று எடப்பாடி யார் மீண்டு முதல்வராகி தமிழகத்தில் நல்லாட்சி தருவார், வரும் மதுரை  அஇதிமுக மாநாடு பாராளுமன்ற தேர்தலில் வெற்றியாக எதிரொலிக்கும் என தெரிவித்தார். இதில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, நகர செயலாளர் மைல் கணேசன், வால்பாறை முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, அண்ணா தொழிற்சங்க தலைவர் அமீது மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க | கரூரில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் - கிரஷர் உரிமையாளர்கள் கோரிக்கை

மேலும், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்  மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தை தொடர்ந்து தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இதுவரை ஒரு கோடியே  30 லட்சம் உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் அதனை 2 கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, 2 கோடி உறுப்பினர் சேர்ப்பது இலக்காக கொண்டு செயல்படுவதாகவும் தெரிவித்தார் மிகப்பெரிய தொண்டர்கள் நிறைந்த கட்சியாக அதிமுக உருவெடுக்கும் என்றும் அப்போது ஓபிஎஸ் காணாமல் போவார் என்றும் அது தெரிவித்தார்.  கர்நாடக அரசு தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை காவிரியில் திறந்துவிட வேண்டும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்னாடக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்றும் 50 ஆண்டுகளாக போராடி பெற்ற உரிமையை கர்னாடக அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நல்லதாக இருந்தாலும் ஆட்சியில் இருக்கும் போது பார்த்து பார்த்து பார்த்து  பேச வேண்டிய நிலை உள்ளது கெட்டதாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது தைரியமாக செய்ய முடிந்தது என தமிழக முதலமைச்சர் கூறியது அவரது அனுபவம் இல்லாததை காட்டுகிறது பொம்மை முதலமைச்சராக அவர் செயல்படுவதாக தெரிவித்தார் இதிலிருந்து அவர் அதிமுக ஆட்சியிக்கு  எதிராக என்னென்ன செய்திருப்பார் என்று மக்கள் தெரிந்து கொள்ள அவர் பேச்சு ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது என்றும் தெரிவித்தார்.  படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது அதிமுகவின் நோக்கம் அதனடிப்படையில் படிப்படியாக அமல்படுத்த வேண்டும்.  படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்துவதும் மதுவிலக்கால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அரசின் கடமை என்று தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறுமியின் கை தவறுதலாக எடுக்கப்பட்ட சம்பவம் குறித்து கேட்டபோது இது வன்மையாக கண்டிக்கத்தக்க மருத்துவத்துறையில் பணியாறற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு தனது ஆறுதலை தெரிவித்துக் கொள்வதோடு அரசு அவர்களுக்கு உதவி கரம் ஈட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க | பாட்டில்களுக்கு குட்பை சொல்ல டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம் - அமைச்சர் முத்துசாமி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News