வராத கரண்டுக்கு பில்லு! வடிவேலு பாணியில் நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி தமிழக அரசை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 23, 2022, 11:51 AM IST
  • தமிழகத்தில் அதிக மின் வெட்டு காணப்படுகிறது.
  • மின் பற்றாக்குறையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
  • திமுக அரசை பலர் விமர்சித்து வருகின்றனர்.
வராத கரண்டுக்கு பில்லு! வடிவேலு பாணியில் நடிகை கஸ்தூரி title=

தமிழகத்தில் கோடை காலத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் போதுமான காற்றோட்டம் இல்லாமல் புலுக்கமாகவே காணப்படுகின்றனர். இந்த நிலையில், கோவை, திருவள்ளூர், திருவாரூர், திருச்சி உள்பட பல்வேறு
மாவட்டங்களில் இரவு நேரங்களில் தொடர் மின் வெட்டு என்பது தீர்க்க முடியாத பிரச்சனையாகவே உள்ளது. 

மேலும் படிக்க | தொடர் மின்வெட்டு - சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி விளக்கம்

இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் கொசு கடியில் மக்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர். தொடர்ந்து, மின்வெட்டு காரணமாக தினந்தோறும் பள்ளி மாணவர்கள் வீட்டு பாடங்களை கற்பதில் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒரு வாரமாக இருளில் சிக்கி தவிக்கும் மக்கள் தங்கள் வீட்டில் மெழுகு வர்த்தி விளக்கை பயன்படுத்தி கொண்டு முன்னோர் காலத்தில் இருந்த வாழ்க்கைக்கு சென்றுள்ளனர். தமிழகத்தில் தொடர் மின்வெட்டுக்கு எதிர்க்கட்சிகள் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களல் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை கஸ்தூரி ஆளும் அரசை மர்சித்துள்ளார்.  இது குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வராத கரெண்டுக்கு பில்லு மட்டும் கரெக்ட்டா வந்துதுடுது, ஒண்ணுமே புரியல.. விடியல் மாடல் என கடுமையாக சாடியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

 

மேலும் படிக்க | அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி: விஜயகாந்த் வேதனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News