5 கிலோ பிட் பேப்பர் பிடிபட்ட விவகாரம் - 11 தேர்வறை கண்காணிப்பாளர்கள் சஸ்பெண்ட்

10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 5 கிலோ பிட் பேப்பர்கள் குவியல் குவியலாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  

Written by - Arunachalam Parthiban | Last Updated : May 20, 2022, 11:37 AM IST
  • பிளஸ் 2 பொதுத்தேர்வில் காப்பி
  • பிடிபட்ட ஐந்து கிலோ பிட் பேப்பர்
  • 11 கண்காணிப்பாளர்கள் சஸ்பெண்ட்
5 கிலோ பிட் பேப்பர் பிடிபட்ட விவகாரம் -  11 தேர்வறை கண்காணிப்பாளர்கள் சஸ்பெண்ட் title=

தமிழகம் முழுவதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.  கடந்த 5-ம் தேதி தொடங்கிய 12-ஆம் வகுப்பு தேர்வுகள் வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவலால் ஏற்பட்டிருந்த சிக்கல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த ஆண்டு பொதுத்தேர்வுகளை முழுமையாக நடத்த பள்ளி கல்வித்துறை முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

தேர்வு நடத்தப்படுவதற்கு முன்பே பள்ளி தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில், ''தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் தேர்வு எழுத நிரந்தர தடை, காப்பி அடித்தால் தேர்வை ரத்து செய்வதோடு ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும்'' உள்ளிட்ட தேர்வு அறையில் நடைபெறும் 15 வகையான குற்றங்களின் தன்மைகள் மற்றும் அதற்கான தண்டனை விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. 

இதனிடையே தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பிற்கான கணிதத் தேர்வு கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு தொடங்குவதற்கு முன் தேர்வுத் துறை இணை இயக்குனர் பொன் குமார் தலைமையிலான பறக்கும் படையினர் தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களை சோதனை செய்தனர்.

மேலும் படிக்க | 'நீட்' தேர்வு அச்சம் - திருமணமான 6 மாதத்தில் பெண் மருத்துவர் தற்கொலை!

Bit Paper

இந்த அதிரடி சோதனையில் நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் உள்ள அரசு பொதுத்தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் காப்பி அடிக்க மறைத்து வைத்திருந்த 5 கிலோ அளவிற்கு மைக்ரோ ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பாடப்புத்தகங்களை சிறிய அளவில் சுருக்கி மைக்ரோ பிட் பேப்பர்களாக அவை தயார் செய்யப்பட்டிருந்தன. இந்த விவகாரம் தேர்வுத்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 11 தேர்வு அறை கண்காணிப்பாளர்களை கூண்டோடு தேர்வு பணியில் இருந்து நீக்கம் செய்து தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் படிக்க | செருப்பை தலையில் சுமந்த சமூதாயத்தினர் இப்போது மேயர்கள் - லியோனி சர்ச்சை பேச்சு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News