நெல்லையில் ஒரு பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுண் செல்லும் சாலையில் உள்ளது சாப்ஃடர் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் இன்று காலை 11 மணி அளவில் இடைவேளை விடப்பட்ட நேரத்தில் சில மாணவர்கள் கழிப்பறைக்கு சென்றுள்ளனர்.
அப்போது பள்ளி கட்டிடத்தின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உயிர் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 100 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
ALSO READ | காணாமல் போன 15 வயது சிறுமி சாக்குப்பையில் சடலமாக கண்டெடுப்பு!
சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மிகுந்த கோபத்துடன் பள்ளியில் கற்களை வீசிய மாணவர்கள், பள்ளியில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தினர்.
சுவர் இடிந்து விழுந்ததால், தங்களுடன் படித்த இரு மாணவர்கள் உயிர் இழந்ததால், மிகுந்த மன வேதனைக்கு ஆளான மாணவர்கள், இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களோடு போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சுவர் இடிந்து விழுந்ததில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்திருந்த மேலும் 1 மாணவர் இறந்ததை அடுத்து பள்ளி வளாகத்தில் மீண்டும் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் உயிர் இழந்த மாணவர்களின் பெயர்கள் விஸ்வரஞ்சன், சஞ்சய் மற்றும் அன்பழகன் என தெரியவந்துள்ளது.
பள்ளிக்கு படிக்க சென்ற மாணவர்களுக்கு இப்படி ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு காட்டப்படும் அதே அளவு அக்கறை மாணவர்களுக்காக செய்யப்படும் அடிப்படை வசதிகளிலும் காட்டப்பட வேண்டும் என்பதற்கு இந்த பரிதாப சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு!!
ALSO READ | திருமணத்துக்கு ஆசைப்பட்ட ’குடி’மகன் - கொலை செய்த தந்தை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR