கிரிக்கெட்டில் கடைசி பந்து தொடர்பான பல கதைகள் உள்ளன. ஆனால் இந்திய கிரிக்கெட் ராசிகளின் மனதில் கடைசி பந்தைப் பற்றிய கதை நினைவிருக்கிறது என்றால், அது பாகிஸ்தானின் ஜாவேத் மியாதாத்தின் சிச்சர் தான் நினைவுக்கு வரும். 1980 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் கடைசி பந்துக்கு ஆறு ரன்கள் தேவை. இந்திய வீரர் சேத்தன் ஷர்மா வீசிய கடைசி பந்தில் சிச்சர் அடித்து பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
ஆனால் கீழே உள்ள வீடியோவில், வெற்றிக்கு கடைசி பந்தில் ஆறு ரன்கள் தேவை என்ற நிலையில், எந்தொரு ஷாட்டும் அடிக்காமல் வெற்றி பெற்றது. எப்படி சாத்தியம் ஆனது வெற்றி? நீங்கள் நம்பவில்லையா? இதோ இந்த வீடியோவை நீங்கள் பாருங்கள். உங்களுக்கு புரியும்.
6 runs needed off 1 ball and the team scored it with 1 ball to spare pic.twitter.com/XOehccVBzA
— Amit A (@Amit_smiling) January 8, 2019
மும்பையில் உள்ள ஆதர்ஷ் கிரிக்கெட் கழகத்தின் சார்பில் தேசாய் மற்றும் டோம்பிவிளி அணைகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. டோம்பிவிளி முதலில் பேட்டிங் செய்து 75 ரன்கள் எடுத்தது. 76 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தேசாய் அணி 70 ரன்கள் எடுத்தது. தற்போது வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவை. கடைசி ஒரு பந்து தான் இருக்கிறது. டோம்பிவிளி அணியின் பந்து வீச்சாளர தொடர்ந்து ஆறு "ஒய்ட்" போட்டு தேசாய் அணியை வெற்றி பெற செய்தார். தேசாய் அணி இந்த வெற்றிக்குப் பிறகு கொண்டாட்டத்தில் மூழ்கியது.