ஆசிய கோப்பை தொடர் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்து வரவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. வழக்கம்போல் இந்த பட்டியலிலும் ரோஹித் ஷர்மா புரக்கணிக்கப்பட்டுள்ளார்.
துபாயில் நேற்று முன்தினம் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இத்தொடரில் ரோகித் ஷர்மா தனது இரண்டாவது அதிகப்பட்ச தொடர் ரண் (317 / Avg_105.67) குவித்தார். இருப்பினும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக எதிர்வரும் டெஸ்ட் தொடருக்கான வீரர்கள் பட்டியலில் ரோஹித்தால் 15-ஆவது வீரராக கூட இடம் பிடிக்கமுடியவில்லை.
Indian team: Virat Kohli (captain), KL Rahul, Prithvi Shaw, Mayank Agarwal, C Pujara, Ajinkya Rahane (vc), H Vihari, Rishabh Pant (wk), R Ashwin, R Jadeja, Kuldeep Yadav, M Shami, Umesh Yadav, M Siraj, Shardul Thakur
— BCCI (@BCCI) September 29, 2018
தேர்வுக் குழுவின் இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. தற்போது நடைப்பெற்ற ஆசிய கோப்பை போட்டிகளிலும் கூட முழுத்தொடரில் அவர் கேப்டனாக நிலைக்கவில்லை. கேப்டன் பொருப்பு தரவில்லை என்றால் பரவாயில்லை, விளையாடக்கூட வாய்ப்பு அளிக்கவில்லை என்பது தான் ரசிகர்களின் கோவம்.
Once again Rohit Sharma snubbed, Even on Indian conditions!! Never got a full series run from his captain. And It will be harsh call if not included for Australia tour.
Sun might not rise again! @BCCI @RaviShastriOfc @imVkohli @ImRo45 #INDvWI
— Manish (@IManishh10) September 29, 2018
I think rohit sharma deserve to play test cricket
— jeenath jain (@jeenathjain) September 29, 2018
வரும் அக்டோபர் 4-ஆம் நாள் மேற்கிந்திய தீவுகள் உடனான டெஸ்ட் தொடர் துவங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல்...
விராத் கோஹ்லி (கேப்டன்), கே.எல். ராகுல், பிரித்வி ஷா, மாயன்க் அகர்வால், புஜாரா, அஜிங்கியா ரஹனே, எச் விஹாரி, ரிஷாப் பன்ட், ஆர் அஸ்வின், ஆர் ஜடேஜா, குல்தீப் யாதவ், எம் ஷாமி, உமேஷ் யாதவ், எம். சிராஜ், ஷர்டுல் தாகூர்.