சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே! தோனி 5000 ஐபிஎல் ரன்கள்

CSK vs LSG: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றது. தோனி ஐபிஎல்லில் 5000 ரன்களை குவித்தார்.  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 3, 2023, 11:42 PM IST
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை தோற்கடித்தது சிஎஸ்கே
  • டெவோன் கான்வே அதிரடி
  • தோனி ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களைக் கடந்தார்
சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே! தோனி 5000 ஐபிஎல் ரன்கள் title=

IPL 2023 Match 6: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி, தனது சொந்த மண்ணில் 2023 ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்களை எடுத்த நிலையில், அடுத்து களம் இறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 205 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

ஏப்ரல் மூன்றாம் தேதியான இன்று (திங்கட்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ருஇந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லெஜண்டரி விக்கெட் கீப்பர்-பேட்டர் எம்எஸ் தோனி 5,000 ரன்களை கடந்தார். 

எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான CSK இன் இரண்டாவது IPL 2023 போட்டியின் போது தோனி இந்த சாதனையை நிகழ்த்தினார்.

19வது ஓவரில் மட்டை வீச களம் இறங்கிய தோனி, அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை அடித்தார். தனது மூன்றாவது ஸ்ட்ரெயிட் சிக்ஸரை அடிக்க முற்பட்ட போது மார்க் வுட் வீசீய பந்தை பிடித்த ரவி பிஷ்னோய் அற்புதமான கேட்சை எடுத்து தோனியை அவுட் செய்தார்.

236 போட்டிகளில், 39.09 சராசரியில் 5,004 ரன்கள் எடுத்துள்ளார். அவர் தனது ஐபிஎல் வாழ்க்கையில் 24 அரை சதங்களை அடித்துள்ளார், சிறந்த ஸ்கோரான (84*) அவரது ரன்கள் 135.53 ஸ்டிரைக் ரேட்டில் வந்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவித்த ஏழாவது வீரர் ஆவார். விராட் கோலி (6,706 ரன்கள்), ஷிகர் தவான் (6,284 ரன்கள்), டேவிட் வார்னர் (5,937 ரன்கள்), ரோஹித் ஷர்மா (5,880 ரன்கள்), சுரேஷ் ரெய்னா (5,528 ரன்கள்) மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் (5,162 ரன்கள்) என ரன் பட்டியலில் தோனி ஏழாவது இடத்தில் உள்ளார்.

போட்டியில் முதலில் மட்டை வீச களம் இறங்கிய சென்னை அணி, 20 ஓவர்களில் 217/7 ரன்களை எடுத்து, லக்னோ அணி 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தது.

மேலும் படிக்க | ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் ருத்ரதாண்டவம்..! சிஎஸ்கேவுக்கு ரன்மழை

தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் (31 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 57), டெவன் கான்வே (29 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 47) ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 110 ரன்களை 55 பந்துகளில் சேர்த்தனர்.

ஷிவம் துபே (16 பந்துகளில் 27, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), அம்பதி ராயுடு (14 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 27), தோனி ஆகியோர் அதிரடியாக விளையாடி சிஎஸ்கே மகத்தான ஸ்கோரை எட்ட உதவினார்கள். 

எல்எஸ்ஜியின் பந்துவீச்சாளர்களில் ரவி பிஷ்னோய் 3/28 எடுத்தார். வூட் தனது நான்கு ஓவர்களில் 3/49 எடுத்தார். அவேஷ் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

மேலும் படிக்க | CSK vs LSG: முதல் போட்டி தோல்வி! சென்னை அணியில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News